Saturday, April 18
Shadow

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பிறந்த தின பதிவு

நா.முத்துக்குமார் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.

இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் திகதி, வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.

ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.

இவர் பாடலெழுதிய சில திரைப்படங்கள்: மாற்றான், 7ஜி ரெயின்போ காலனி, நந்தா, வெயில், புதுப்பேட்டை, சந்திரமுகி, சிவாஜி த பாஸ், கற்றது தமிழ், கஜினி, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தம்பி. காதல் கொண்டேன், காதல், மன்மதன், சண்டக்கோழி, தீபாவளி, போக்கிரி, பீமா, வாழ்த்துகள், அழகிய தமிழ் மகன், சத்தம் போடாதே, கல்லூரி, வேல், சக்கரக்கட்டி, சந்தோஷ் சுப்பிரமணியம், ஆறு, வாரணம் ஆயிரம், சிவா மனசுல சக்தி, அயன், நாடோடிகள், வாமனன், ஆதவன், சுறா, யாரடி நீ மோகினி, பையா, அங்காடித் தெரு, சிங்கம், களவாணி, மதராசப்பட்டினம், நான் மகான் அல்ல, வானம், ரத்த சரித்திரம், போராளி, எத்தன், வேட்டை, எங்கேயும் காதல், அவன் இவன், பொய் சொல்லப் போறோம், நர்த்தகி, தெய்வத் திருமகள், வந்தான் வென்றான், நண்பன், அரவான், மன்னா, வழக்கு எண் 18/9, பில்லா 2, நீதானே எந்தன் பொன்வசந்தம், முருகா