Sunday, June 21
Shadow

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘அசுரன்’ திரைப்படம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியார், ஷகீலா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் தான் ‘அசுரன்’. விவசாயத்தை மையப்படுத்திய சாமனியனின் அரசியலை பதிவு செய்யும் படமாக ‘அசுரன்’ தயாராகி வருகிறது.

தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை மஞ்சு வாரியார் மற்றும் ஷகீலா இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் குந்தலகேசி, கக்கன் மற்றும் பூச்சி என்ற மூன்று வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்.

இவர்களுடன் தமிழ் திரைத்துறையில் மாற்று சினிமாவுக்கான நடிகர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பசுபதி, ’ஆடுகளம்’ நரேன், பவன், யோகி பாபு, தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில், ’காதல்’ ‘கல்லூரி’ போன்ற படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் காளையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்

இந்நிலையில் இந்த படத்தை வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.