Friday, April 17
Shadow

நடிகர் திலகன் பிறந்த தின பதிவு

சுரேந்தரநாத் திலகன் பரவலாக அறியப்பட்டது திலகன், இருநூற்றுக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள ஓர் இந்திய திரைப்பட நடிகரும் நாடக நடிகரும் ஆவார். குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்று இந்தியத் திரைப்படத்துறையில் பரவலாகப் பாராட்டப்பட்டவர். 2009ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 21, 2012 அன்று புதிய திரைப்படமொன்றின் படப்பிடிப்புத் தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து திருச்சூரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இரண்டு மாரடைப்புகளைக் கடந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவருக்கு, இதய நோய் தவிர, குளிர்சுரமும் (நியுமோனியா) ஏற்பட்டுள்ளது. எனவே செயற்கை மூச்சியக்கக் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் செப்படம்பர் 24,2012 அன்று சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமையில் காலை 3 மணிக்கு இறந்தார்.

இவர் நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்: சத்ரியன், மேட்டுக்குடி, சுயேச்சை எம்எல்ஏ, நீ வேணுண்டா செல்லம், அலிபாபா, வில்லன், ஆயுத பூஜை, பாலா