Saturday, November 7
Shadow

ஜீ டிவி விருதுகளில் அதிக விருதுகளை தட்டி சென்ற அஜித்தின் விஸ்வாசம்

இந்தியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தொலைக்காட்சி , ஜீ தமிழ் நிறுவனத்தின் சார்பாக ஜீ சினி அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது .

இதில் நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ” Socially Responsible Movie ” என்ற விருதை வென்றது . இந்த விருதினை நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றுக்கொண்டார் . மேலும் நடிகர் அஜித்குமாருக்கு Most Empowering Performer of the Decade என்ற விருதும் வழங்கப்பட்டது . அஜித் குமார் சார்பாக போனி கபூர் விருதை பெற்றுக்கொண்டார்.

 

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: பெருமாள் செல்வம் (அசுரன்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: விஜய் கார்த்திக் (ஆடை)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அஸ்வந்த் (சூப்பர் டீலக்ஸ்), சாதனா (பேரன்பு)

சிறந்த எடிட்டிங்: சத்யராஜ் நடராஜன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த கலை இயக்குநர்: விஜய் ஆதிநாதன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த அறிமுக இயக்குநர் : அருண்ராஜா காமராஜ் (கனா)

சிறந்த உறுதுணை நடிகர்: ஜார்ஜ் மரியான் (கைதி)

சிறந்த நடன இயக்குநர்: பிரபுதேவா (மாரி 2 – ரவுடி பேபி)

சிறந்த பாடலாசிரியர்: தாமரை (கண்ணான கண்ணே – விஸ்வாசம்)

சிறந்த அறிமுக நடிகை: லிஜோ மோல் ஜோஸ் (சிவப்பு மஞ்சள் பச்சை)

சிறந்த பின்னணி பாடகி: ஸ்ரேயா கோஷல் (அன்பே பேரன்பே – என்.ஜி.கே)

சிறந்த பின்னணி பாடகி (நடுவர் தேர்வு): பத்மப்ரியா (ஐரா – மேகதூதும்)

இந்திய இசையின் பெருமை: ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த பின்னணி பாடகர்: சித் ஸ்ரீராம் (கண்ணான கண்ணே – விஸ்வாசம்)

சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (பேட்ட)

சிறந்த கதை: ராம் (பேரன்பு)

சிறந்த திரைக்கதை: பார்த்திபன் (ஒத்த செருப்பு சைஸ் 7)

இந்திய சினிமாவின் பெருமை: கமல்ஹாசன்

பிடித்த இயக்குநர்: லோகேஷ் கனகராஜ் (கைதி)

இந்திய சினிமாவில் சிறந்து விளங்குவதற்காக கே.பாலசந்தர் விருது: இயக்குநர் ஷங்கர்

சிறந்த அறிமுக நடிகர்: துருவ் விக்ரம் (ஆதித்ய வர்மா)

சிறந்த இயக்குநர்: வெற்றி மாறன் (அசுரன்)

சிறந்த நடிகை (நடுவர் தேர்வு) – சமந்தா

சமூகப் பொறுப்புள்ள நடிகர் – விஜய் சேதுபதி

சிறந்த நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)

மக்களுக்கு விருப்பமான நடிகை: நயன்தாரா (விஸ்வாசம், பிகில்)

சிறந்த வில்லன்: அர்ஜுன் தாஸ் (கைதி)

சிறந்த நடிகர்: தனுஷ் (அசுரன்)

இந்திய சினிமாவில் பெண்களுக்கு உத்வேகம் அளித்ததற்காக ஸ்ரீதேவி விருது: நயன்தாரா

கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் நம்பிக்கையுடன் செயல்பட்டவர்: அஜித்

மக்கள் விருப்பமான இசையமைப்பாளர்: இமான் (விஸ்வாசம், நம்ம வீட்டுப் பிள்ளை)

மக்களுக்கு விருப்பமான பாடல்: கண்ணான கண்ணே – விஸ்வாசம்

மக்களுக்கு விருப்பமான படம்: விஸ்வாசம்

சிறந்த உறுதுணை நடிகை: ரம்யா கிருஷ்ணன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த காமெடி நடிகர்: யோகி பாபு (கோமாளி)