Tuesday, April 28
Shadow

அனைவரின் வாழ்த்து மழையில் வரலஷ்மி

2012-ல் போடா போட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர், நடிகை வரலட்சுமி. இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். தமிழில் அதிகப் படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, மலையாளம், கன்னடம், தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். மக்கள் செல்வி என்றெல்லாம் அடைமொழி வாங்கிய நிலையில் தான் 25 படங்களில் நடித்து முடித்துள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.

அதில் அவர் சொல்லி இருப்பது இதுதான்:

இது ஒரு நீளமான, கடினமானப்‌ பயணமாக இருந்துள்ளது. நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு சுலபமல்ல என்பார்கள்‌. அது என்‌ விஷயத்தில்‌ உண்மை. ஆனால்‌ கனவுகள்‌ கண்டிப்பாக ஒரு நாள்‌ நிஜமாகும்‌. எனது சிறந்த திறனில்‌ நான்‌ வேலை செய்திருக்கிறேன்‌. என்‌ வாழ்க்கையில்‌ இந்தக்‌ கட்டத்தை எட்ட நான்‌ பல சவால்களை சந்தித்துள்ளேன்‌. இப்போது நான்‌ 25 படங்களை முடித்திருக்கிறேன்‌ என்று நினைப்பது எனக்குப்‌ பெரிய அளவுகோலாகத்‌ தெரிகிறது.

என்ன நடந்தாலும்‌ என்னுடன்‌ நின்ற, என்னை ஆதரித்த அனைவருக்கும்‌ நன்றி கூற விரும்புகிறேன்‌. என்‌ பக்கம்‌ நின்று என்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி கூற விரும்புகிறேன்‌. ஏனென்றால்‌ உங்கள்‌ எதிர்மறை எண்ணம்‌ தான்‌ என்னை வலிமையாக்கியது. உங்களைத்‌ தவறென்று நிரூபிக்க இன்னும்‌ பிடிவாதம்‌ பிடிக்க வைத்தது. என்னை ஆதரித்த. அன்பு காட்டிய. என்னுடன்‌ வளர்ந்த என்‌ அன்பார்ந்த ரசிகர்கள்‌ அனைவருக்கும்‌ நன்றி.

என்‌ மீது கட்டுப்பாடில்லாத நம்பிக்கை வைத்த என்‌ அனைத்து இயக்குநர்களுக்கும்‌, தயாரிப்பாளர்களுக்கும்‌ நன்றி கூற விரும்புகிறேன்‌. நிறைய அன்பு, மகிழ்ச்சி, வெற்றியென என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்‌. என்‌ நல்லது கெட்டதுக்கு நடுவில்‌ என்னுடனேயே இருந்த எனது ஒப்பனைக்‌ கலைஞர்‌ ரமேஷ்‌ அண்ணாவுக்கும்‌ என்‌ ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும்‌ நன்றி கூற விரும்புகிறேன்‌. 25 படங்களை முடித்ததை நான்‌ ஆசிர்வாதமாக உணர்கிறேன்‌. என்னுடன்‌ இருந்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு என்‌ நன்றி.

என்றும்‌ என்‌ பணியில்‌ சிறந்து விளங்க முயற்சிப்பேன்‌. எனது சிறந்த நடிப்பைத்‌ தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத்‌ தர என்னை அர்ப்பணிப்பேன்‌. தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள்‌. காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கும்‌. தொடர்ந்து கனவு காணுங்கள்‌. உங்களால்‌ முடிந்த அத்தனை அன்பையும்‌. மகிழ்ச்சியையும்‌ பரப்புங்கள்‌.

-அப்பட்டீன்னு சொல்லி ஷேர் செஞ்ச கடிதாசை கோலிவுட்வாசிகள் பலரும் லைக் & கமெண்ட் போட்டு வாழ்த்தி வாராயாய்ங்க