

ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிக் கொண்டு முன்னணி நகைச்சுவை நடிகர் என்ற பெயரில் வலம் வரும் யோகி பாபு, ஒரு புதிய படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, `காக்டெய்ல்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அறிமுக இயக்குனர் முருகன் டைரக்டு செய்கிறார்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரிக்கிறார்.
`காக்டெயில்’ படத்தை பற்றி முன்னாடி ஒரு முறை கேட்டப் போது, “இந்திய சினிமாவில் முதல்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகி பாபு, நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஒரு வெளிநாட்டு நடிகை நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாசிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். ரவீண் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். இரண்டாவது கட்ட படப் பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
கதைப்படி, யோகி பாபுவும், அவருடைய நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறார்கள். கொலையானது யார், அந்த கொலையை செய்தது யார், அதில் இருந்து யோகி பாபுவும், நண்பர்களும் எப்படி வெளியே வருகிறார்கள்? அதில் பறவையின் பங்கு என்ன? என்பதே கதை.” என்ரு சொன்னார்.
இது குறித்து பரவலான போஸ்ட்ர் ஏதும் வராததால் சர்ச்சை ஏதும் வராத நிலையில் இன்னிக்கு வந்துள்ள போஸ்டரும், விரைவில் வர இருக்கும் டீசரும் பெரும் சர்ச்சைக் கிளப்பும் என்றும் அதன் மூலம் இப்படம் வியாபாரம் ஆகிமென்றும் கணக்கு போடறாங்களாம்!
