Wednesday, April 29
Shadow

கலையரசன் மற்றும் ஆனந்தி நடிக்கும் டைட்டானிக் – காதலும் கவுந்து போகும் இசை பிப்ரவரி 5 ம் தேதி ரிலிஸ்

அட.. ஆமாயில்லே.. இப்படி ஒரு படம் ரெடியாச்சில்லே!

சி.வி.குமார், – அப்படீங்கர புரொடீயூசர் கலையரசன், கயல் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்ச ஒரு படத்துக்கு ‘*டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்*’ என்றெல்லாம் டைட்டில் வைத்து செலக்டிவான மீட்யாக்களை பிரத்தேயகமாகப் பார்த்து பேசி ஏதேதோ நூஸ் வர வச்சார்..

கிட்டத்தட்ட ரெண்டு, மூனு வருசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கினார். ‘தெகிடி’, ‘சேதுபதி’ பட இசையமைப்பாளர் நிவாஸ்.கே.பிரசன்னா இப்படத்திற்கு இசை.

இந்தப் படம் குறித்து குமாரு ஒரு தபா ‘மாயவன்’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ஜானகிராமனுக்கு முதல் படம். அவர் இப்படத்தின் கதையைக் கூறும்போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இது ஆடியன்ஸுக்கு நல்ல ட்ரீட்டாக இருக்கும். இன்றைய ஸ்மார்ட் போன் காலகட்டத்தில் காதல் என்ற உணர்வு எப்படிப் பார்க்கப்படுகிறது, ரிலேஷன்ஷிப், பிரேக்-அப்… என எல்லாவிதமான விஷயங்களையும் செம ஜாலியாகச் சொல்லி இருக்கிறோம். ‘ அப்படீன்னெல்லாம் சொல்லி இருந்தார்..

ஆனா வாரா வாராம் நாலைஞ்சு பட ரிலீஸ் ஆகும் இன்னிய ஸ்பீடான கோலிவுட்டில் இந்த டைட்டானிக் காதல் படம் குறித்து மறந்து போகாத ஆளே இல்லை என்ற நிலையில் இப்போ இப்படத்தின் ஆடியோ வரும் அஞ்சாம் நடக்கப் போறதா ட்விட்டரில் பிட் நோட்டீஸ் வருது..

ம்.. கேட்டுப் பார்ப்போம்