
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது, “சுமூகமாக இருந்த தமிழ் திரைப்படத் துறையில் தற்போது சின்ன சின்ன பிரச்சனைகளை அபாயகரமான பிரச்சனையாக்க முனைகின்றனர்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் சிலர் சென்று வன்முறையாகவோ, அத்துமீறியோ நடந்து கொண்டனர் என்று முருகதாஸ் காவல் துறையிலும் எங்கள் இயக்குனர் சங்கத்திலும் புகார் தெரிவித்துள்ளார்.அவருக்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்து போஸ்டரும் அடித்து ஒட்டி இருக்கிறார்கள் பொதுவாக ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மம் உண்டு.
திரைப்படத் தயாரிப்பாளர் படத்தை தயாரித்து வினியோகஸ்தரிடம் விற்கிறார். அவர் திரையரங்குகளில் வெளியிடுகிறார். அதை உருவாக்கியதற்கான கூலியை உருவாக்கியவர்கள் வாங்கிக் கொண்டு அதிலிருந்து விலகி விடுகிறார்கள்.ஒரு திரைப்படத்தோட லாப நஷ்டங்கள் அதை தயாரித்த தயாரிப்பாளருக்கும் வினியோகித்த வினியோகஸ்தரையே சாரும். உருவாக்கியவரை சாராது.
ஒரு படம் வெற்றியடைந்தா சம்பளம் சற்று உயரும் . தோல்வி அடைந்தால் சம்பளம் குறையும். இல்லை பட வாய்ப்பு வராது.
வினியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதும் தவறு. தயாரிப்பாளர்கள் அதிக விலையில் விற்பதும் தவறு. தயாரிப்பாளர்களிடம் மட்டுமே கேட்க வேண்டிய விஷயத்தை தொழில் நுட்ப கலைஞர்களிடம் கேட்பதை இந்த சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது
படப்பிடிப்பு தளங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வது படப்பிடிப்பை நிறுத்துவது சரியான தீர்வாகாது. உச்ச நடிகர்களின் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் வேறு இடங்களில் நடைபெறுவதால் இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதுடன் இல்லாமல் இதனால் ஹோட்டல்’ உணவு, கார்கள் என அதனை நம்பி உள்ளவர்களின் வருமானமும் கேள்விக்குறியாகிறது. இதனால் தமிழகத்தில் புலங்க வேண்டிய பல கோடி ரூபாய்கள் அண்டை மாநிலத்திற்கோ, வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் படப்பிடிப்பை நிறுத்துவது என்ற கொள்கையை விடுத்து இந்த திரைத்துறையை காப்பாற்றும் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது
இதையெல்லாம் நெறிமுறைபடுத்தி இந்த தொழிலை காப்பாற்ற தமிழக அரசு தலையிட்டு “தமிழ் பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன்” அமைப்பை உருவாக்கி வரைமுறைப்படுத்த வேண்டும்” என்று சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
