

கோலிவுட்டில் எக்கச்சக்கமானோரின் பாராட்டைப் பெற்ற படம் “கைதி”. அந்த படத்தை மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கார்த்தி, அர்ஜுன் தாஸ், நரேன், ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடிச்சிருந்தாங்க. CS சாம் இசையமைத்தார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும் பிலோமின் ராஜ் எடிட்டராகவும் பணியாற்றினர்.
இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகப்போகிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியாகின. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்க திட்டமிட்டு இருக்குது.
லோகேஷ் கனகராஜே இயக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுது.
இந்த படத்தில் கார்த்தி நடித்த தில்லி கதாபாத்திரத்தில் பாலிவுட் ஹாண்ட்ஸம் நடிகரான ஹிரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளாராம்.
இந்த செய்தி பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஹ்ரித்திக் ரோஷன் இறுதியாக டைகர் ஷெரிப்புடன் இணைந்து வார் என்னும் படத்தில் நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல உயரத்தை எட்டியது.
லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜயின் “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார். இந்த பட வேலை முடிந்ததும் ஹிந்தியில் கைதியை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுது.
