Saturday, November 7
Shadow

சோனி டிவி மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் இணைந்து சினிமா தொழிலார்கலுக்கு அமிதாப்பசன் மற்றும் பிரபு கூட்டு.முயற்சியில் உதவி

நம்ம இந்தியா  மாதிரியான பெரிய திரைத்துறை கொண்ட நாட்டிற்கு இந்த கண்ணுக்குத் தெரியாத கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்பு ரொமப பெரிசு தான். அன்றாடங் காய்ச்சிகளான ஏகப்பட்ட திரைப்பட ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இயலாது என்பதால் அவர்களின் அன்றாட தேவைகளுக்கு பெரும் அல்லல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இதை மனதில் கொண்டு பாலிவுட் பிக் பி அமிதாப், நடிகர் பிரபுவோடு இணைஞ்சு நாடு முழுவதும் உள்ள திரைப்படத்துறை உறுப்பினர்களுக்கு 12 கோடி ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார். இதில் தமிழ் திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சோனி டிவி மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் இணைந்து இந்த உதவியை வழங்குகிறது. இதன் மூலம் தென் இந்திய திரைப்பட சங்க உறுப்பினர்கள் 18 ஆயிரம் பேருக்கு தலா 1,500 ரூபாய் பிக் பசார் வவுச்சர் கூப்பன் வழங்கப்படுகிறது என ஃபெப்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்குது.