

இயக்குனர் ஷங்கர் இங்கு எவ்ளோ பெரிய ஜாம்பவான் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். யானைக்கும் அடி சறிய தானே செய்யும்? என்ற பழமொழி ஷங்கர் விஷயத்தில் உண்மையாகிவிட்டது. இங்கு இயக்குனர் ஷங்கருக்கு ‘ஏஜீஎஸ் நிறுவனத்தில் இருந்து தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் உங்களை வைத்து படம் எடுக்க ஆசைப்படுகிறார், ஆபிசில் வந்து அவரை சந்தித்துவிட்டு போங்க’ என அந்த நிறுவனத்தில் இருந்து போன் வந்ததற்கு, ‘நான் வந்து ஆபிசில் பார்க்க வேண்டுமா?’ என அந்த படத்தையே கேன்சல் செய்த மனுஷன் இப்போ வேற்று மொழி நடிகர்களை வைத்து படத்தை இயக்கும் போது, அந்த நடிகர்கள் சொல்லும் கண்டீஷன்களுக்கு எல்லாம் தலையாட்டி கொண்டிருக்கிறாராம்.
கோலிவுட்டில் சிங்கம் போல இருந்த மனுஷன் டோலிவுட் பக்கம் பல் பிடுங்கிய பாம்பு போல் உள்ளாராம். தெலுங்கு சினிமா பக்கம் சிரஞ்சீவி மகன் ராம்சரணை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர். ஆனால் அந்த பக்கம் போனதும் அவர்கள் சொல்லும் கண்டீஷன்களுக்கு எல்லாம் தலையாட்டி கொண்டிருக்கிறாராம். இதை கேள்விப்பட்ட கோலிவுட், ‘எப்படி இருந்த மனுஷன் இப்படி மாறிவிட்டார்?’ என கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

இந்த தெலுங்கு படத்தை இயக்க ஷங்கருக்கு நாற்பது கோடி சம்பளமாம். சம்பளத்தை கையில் கொடுத்துவிட்டு, கண்டீஷன்களையும் போட்டுள்ளார்கள். என்னவென்றால், படத்தை 120 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் மற்றும் பவுண்டட்ஸ்கிரிப்டை கையில் கொடுக்க வேண்டும் என அடுக்கடுக்காக கண்டீஷன்களை போட்டுக்கொண்டே போயுள்ளார்கள். அதற்கு இயக்குனர் ஷங்கரும் மறுப்பு தெரிவிக்காமல் தலையாட்டியுள்ளார். நம்மூரில் மிடுக்காக வீரப்பாக இருக்கும் பல இயக்குனர்கள் வெளி மாநிலங்களில் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள் என பேசிக்கொண்டிருக்கிறது கோலிவுட் வட்டாரம்.
