
*வில்லன் அவதாரம் எடுக்கும் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் பிரபல நடிகர் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ்*
தமிழ் திரை உலகில் பழம்பெரும் நடிகரான நாகேஷின் பேரனும் பிரபல நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயனாக திரைப்படங்களில் அறிமுகமாகி தற்போது JNS Studios தயாரித்து இயக்குனர் நிர்மல் இயக்கும் *வெள்ளகுச்சி* என்கின்ற திரைப்படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுக்கிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது கதையின் களமும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் அவரை இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க தூண்டியதாக கூறியுள்ளார். மேலும் இத்திரைப்படம் திரைக்கு வரும்போது ரசிகர்கள் மத்தியில் வேறு ஒரு பார்வையில் என்னை பிரதிபலிக்கும் என நடிகர் கஜேஷ் நாகேஷ் கூறியுள்ளார்.
