

சினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த தம்பதிகள் வாழ்க்கையில் எந்த அளவுக்கு வெற்றிகரமாக உள்ளார்களே அதே போல தான் சினிமாவிலும் இவர்கள் வாழ்க்கை பலருக்கு உதாரணமாக உள்ளது. அது போல இவர்கள் தயாரிக்கும் படமும் தரமான படங்கள் தான் சமீபத்தில் இவர்களின் படைப்பான சூரரை போற்று உலக அளவில் பேசபட்ட ஒரு படமாக அமைந்தது.
அந்த வகையில் இவர்களின் அடுத்த படைப்பான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படமும் கிராமத்து கவிதை என்று தான் சொல்லணும். மிக சிறந்த வாழ்வியல் யதார்த்தை சொல்லி இருக்கும் படம் தமிழ் சினிமா இருக்கும் வரை கிராமத்து மண் வாசனை மறையாது மறக்காது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த படம். இன்று அப்பாவி மக்களும் குறிப்பாக கிராமத்து மக்கள் அரசியல்வாதிகளின் பிடியில் எப்படி எல்லாம் சிக்கி தவிக்கிறார்கள், என்பதை சொல்லும் படம் தான் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்.
இந்த படத்தில் அறிமுக நாயகன் மிதுன் மாணிக்கம் கதையின் நாயகனாகவும் நாயகியாக ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் இவர்களோடு முக்கிய பாத்திரத்தில் வடிவேல் முருகன் மற்றும் பலர் நடிப்பில் சுகுமார் ஒளிப்பதிவில் பாடகர் கிருஷ் முதல் முறையாக இசையமைத்து வெளிவந்து இருக்கும் படம் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இந்த படத்தின் இயக்குனர் கரிசல் மூர்த்தி

சரி படத்தின் கதை களம்
வறண்ட கிராமத்தில் வானம் பார்த்த பூமி விவசாயம் செய்யும் தம்பதி மிதுன் மற்றும் ரம்யா இவர்களிடம் இரண்டு காலை மாடுகள் இதை இவர்கள் சின்ன வயதில் இருந்து அதாவது கன்னுக்குட்டியாக இருக்கும் போதிலிருந்து வளர்த்து வருகிறார்கள்.இதை இவர்கள் மாடு மாதிரி வளர்க்காமல் தன் சொந்த குழந்தைகள் போல வளர்த்து வருகின்றனர். இதற்கு வெள்ளையன் கருப்பன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இதற்காக இவர்கள் குழந்தை பெற்று கொள்வதையும் தள்ளி போட்டு வருகிறாகள். கிட்டதட்ட நாலு வயது மாடாக இருக்கும் போது இந்த வெள்ளையனும் கருப்பனும் காணமல் போகிறது. இந்த மாடுகள் எப்படி காணமல் போனது என்பது தான் மீதி கதை இந்த மாடுகளை குழந்தைகள் போல பாதுகாத்து வருகின்றனர் இதை இவர்கள் அடிக்க மாட்டார்கள். வேறு யாரவது அடித்தாலே இல்லை தப்ப பேசினாலோ இவர்கலுக்கு கோவம் வந்து விடும். இந்த சூழ்நிலையில் ஒரு அரசியல் விழாவுக்கு இந்த மாடுகளை கொண்டு செல்கிறார் மிது அங்கு ஒருவர் மாடு மேடைக்கு வர அடம் பிடிக்கிறது என்று கட்டையால் அடிக்கிறார் அதை பார்த்த மிதுனுக்கு கோவம் வர அந்த மேடையில் யார் இருக்கிறார் என்று எல்லாம் பார்க்காமல் அவர்களை தள்ளிவிட்டு தன் வெள்ளையனையும் கருப்பனையும் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார் . இதனால் அந்த அரசியல்வாதின் கோவத்துக்கு ஆள் ஆகிறார். மிதுன் இதன் விளைவு மாடுகள் இரண்டும் கடத்த படுகிறது இந்த மாடுகளை மீண்டும் மீட்டாரா இல்லையா என்பது தான் மீதி கதை

படத்தின் இயக்குனர் கரிசல் மூர்த்தி படத்தின் கதை களமும் சரி திரைக்கதையும் சரி மிக நேர்த்தியாக அமைத்துள்ளார். படத்தின் பலம் திரைகதையும் வசனமும் என்று சொன்னால் மிகையாகது பல கதாபாத்திரங்கள் மிகவும் புதுமையாகவும் ஏன் நடித்தவர்களும் மிக அற்புதம் என்று தான் சொல்லணும்.நடிகர்களின் தேர்வு மிக கனகச்சிதம் காட்சிக்கு காட்சி இயக்குனர் நம்மை கவருகிறார் பல காட்சிகள் நமக்கு ஆச்சிரியத்தை உண்டுபண்ணும் அந்த அளவுக்கு நேர்த்தியாக அமைத்துள்ளார் இயக்குனர்.
மிதுன் மாணிக்கம் அறிமுக நாயன் என்று சொல்லும் அளவுக்கு இல்லாமல் மிகவும் தேர்சியான ஒரு நடிகராக வளம் வந்துள்ளார் கதையின் நாயகன் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் அற்புதமாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் மீண்டும் ஒரு நேர்த்தியான நடிப்பு இவருக்கு ஏற்ப ஒரு கதாபாத்திரம் கிராமத்து பொண்ணு போலவே தோற்றமும் சரி நடிப்பிலும் சரி வெளுத்து வாங்கி இருக்கிறார்.
வாணி போஜன் தொலைகாட்சி நிருபராக வந்து நடிப்பில் நம்மை கருகிறார் கதைக்கு முக்கியமான பாத்திரம் என்பதை உணர்ந்து நடித்துள்ளார் ஒரு நிஜ நிருபர் போல நடித்துள்ளார் அதே போல படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் வடிவேல் முருகன் நம்மை மிகவும் கவர்ந்துள்ளார் இவர் நகைசுவை நடிகரா இல்லை குணசித்திர நடிகரா என்று சொல்லும் அளவுக்கு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இவர் வரும் காட்சிகள் அரங்கம் அதிருகிறது.
இயக்குனரின் மிக பெரிய பலம் ஒளிபதிவாளர் சுகுமார் கதைக்கு ஒளிப்பதிவு மூலம் பிரமாண்டத்தை உண்டு பண்ணியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் வர்ணம் தீட்டிய ஓவியம் போல அமைத்துள்ளார். அதேபோல படத்தின் இன்னொரு மிக பெரிய பலம் என்றால் அது இசையமைப்பாளர் கிருஷ் ஆம் ஒவ்வொரு பாடல்களும் சரி பின்னை இசையும் நம் காதில் ரீங்காரம் விடுகிறது
மொத்தத்தில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நம்மை ஆளுகிறார்கள்
