Wednesday, October 28
Shadow

கேரளா சூப்பர்ஸ்டார் மகனின் நண்பன் விஜய் ரசிகராம்

விஜய்க்கு தமிழ் நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருகிறார்களோ அந்த அளவுவுக்கு கேரளாவிலும் உள்ளனர் ஏன் அங்கு உள்ள ரசிகர்கள் கோவில் கட்ட முயற்சித்தனர் .அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இப்ப ஒரு படி மேலே போய்விட்டது .

தமிழ் சினிமாக்களில் எந்தப்படங்களிலும் மோகன்லால், மம்முட்டி என் யார் பெயரையும் குறிப்பிட்டு எந்த ஹீரோவும் வசனம் பேசுவதாக காட்சிகள் வைப்பதே இல்லை. ஆனால் மலையாள சினிமாவை பொறுத்தவரை, ரஜினி, விஜய், தனுஷ் இவர்களின் பெயர்கள் எண்பது சதவீத படங்களில் ஏதாவது ஓரிடத்தில் இடம்பெற்று விடுகிறது.. ரஜினி, விஜய் புகழ்பாடும் வசனமாகவோ, அல்லது அவர்கள் நடித்த படங்களின் காட்சிகளை இணைப்பதன் மூலமோ தமிழ் சினிமாவை மலையாள சினிமாவுடன் இணைக்கும் வேலையை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.. அந்தவகையில் லேட்டஸ்ட்டாக விஜய்க்கு பெருமை சேர்க்கும் விதமாக துல்கரின் நண்பரான சன்னி வெய்ன் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘போக்கிரி சைமன்’ என டைட்டில் வைத்துள்ளார்கள்..

இந்த டைட்டிலை எப்படி அறிவித்தார்கள் தெரியுமா..? விஜய்யின் ‘போக்கிரி’ படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் மறு ரிலீஸ் செய்து அந்த விழாவில் இந்தப்படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்கள்.. இந்தப்படத்தில் விஜய்யின் அதி தீவிர ரசிகராக நடிக்கிறார் சன்னி வெய்ன். குறிப்பாக ‘போக்கிரி’ படம் பார்த்துவிட்டு அதேபோல நடை, உடை பாவனைகளுடன் சண்டியராக வளம் வரும் கேரக்டர் என்பதால் இந்த டைட்டிலை வைத்துள்ளார்களாம். துல்கரின் முதல் படமான ‘செகண்ட் ஷோ’விலிருந்து நீலாகாசம் பச்சக்கடல் சுவர்ண பூமி, கம்மட்டிப்பாடம் மற்றும் சமீபத்தில் வெளியான ‘ஆன் மரியா களிப்பிலானு’ படம் வரை துல்கருடன் நடித்து தனது நட்பை தொடர்ந்து வரும் நடிகர் தான் இந்த சன்னி வெய்ன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply