
தமிழ் சினிமாவின் அம்மா சூப்பர்ஸ்டார் என்றால் அவர் சரண்யா பொன்வண்ணன்தான். அந்தளவுக்கு பாசமான அம்மாவாக இவர் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக இடம்பிடித்துவிட்டார். இவருக்கு ரசிகர் வட்டம் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போகிறது.
இந்த சமயத்தில் இவர் சோதனை முயற்சியாக வில்லியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டி அடுத்ததாக இயக்கியிருக்கும் அச்சமின்றி படத்தில்தான் இவர் வில்லியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. அம்மா கதாபாத்திரம் போல இவருடைய வில்லி அவதாரத்தையும் ரசிகர்கள் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த படம் வரும் 30ம் தேதி உலகங்கும் வெளியாகிறது .
