
‘யெல்லோ’ வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி… புதிய தலைமுறை நடிகர்களில் கவனிக்கப்படும் பெயராக உயர்ந்து வரும் வைபவ் முருகேசன்!
ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வைபவ் முருகேசன், தமிழ் திரையுலகில் தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களில் ஒருவராக கவனம் பெற்று வருகிறார்.
திரையுலகில் ஒரே படத்தின் வெற்றியால் புகழின் உச்சியை எட்டும் நடிகர்கள் இருக்கலாம். ஆனால், சிறிய வாய்ப்புகளிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு படியையும் உறுதியுடன் கடந்து, தனது திறமையால் தனக்கென இடம் பிடிக்கும் கலைஞர்களே நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள். அந்த வரிசையில் இன்று அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக மாறி வருகிறார் நடிகர் வைபவ் முருகேசன்.
சமீபத்தில் வெளியான ‘யெல்லோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்ற வைபவ், தற்போது தனது அடுத்த முக்கியமான படைப்பான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ மூலம் பார்வையாளர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். இயக்குநர் சபீர் சுதாகர் இயக்கியுள்ள இந்த ZEE5 ஒரிஜினல் வெப் தொடர், ஜூன் 26 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னை நோக்கி பயணிக்கும் கிராமத்து இளைஞர்கள் குழுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடர், நகைச்சுவை, உணர்வு, நட்பு மற்றும் போராட்டம் ஆகியவற்றை கலந்த சுவாரஸ்யமான கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. இதில் வைபவ் முருகேசனுடன் வெங்கட் பாலமுரளி, ஜகா, லாவண்யா, ஷரத் ரவி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வைபவின் நடிப்புப் பயணம் சிறுவயதிலேயே தொடங்கியது. பத்து வயதிலிருந்தே தமிழ் மற்றும் ஆங்கில மேடை நாடகங்களில் தொடர்ந்து பங்கேற்று, நடிப்புக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டார். மைக்கேல் ஜாக்சன் மற்றும் பிரபுதேவாவின் கலைநிகழ்ச்சிகள் அவருக்கு அளித்த தாக்கம் பின்னர் சினிமா மற்றும் நடிப்பு மீதான ஆழமான ஆர்வமாக வளர்ந்தது.
நடிப்புத் துறையில் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல்வேறு பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் தொழில்முறை நடிப்பு வகுப்புகளில் பங்கேற்ற அவர், வாய்ப்புகளை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக தனது திறமையை தொடர்ந்து செம்மைப்படுத்திக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் ‘பேட்ட’, ‘கோமாளி’, ‘தாராள பிரபு’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமான வைபவ், குறுகிய திரைநேரத்திலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் ‘கதிர்’ திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரமும் அவரது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியது.
அவரது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது பாராட்டுகளைப் பெற்ற ‘வதந்தி’ வெப் தொடர். நூற்றுக்கணக்கான போட்டியாளர்களை கடந்து தேர்வான அவர், ‘ஜோன்ஸ் துரை’ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே தனித்த அடையாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து ‘அமரன்’ திரைப்படம் மற்றும் ‘ஹே லீலா’ வெப் தொடரின் மூலம் தனது ரசிகர் வட்டத்தை விரிவுபடுத்தினார்.
சமீபத்தில் வெளியான ‘யெல்லோ’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த அவர், உணர்வுப்பூர்வமான மற்றும் நம்பகத்தன்மை மிக்க நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார். இந்த படம் அவரது கலைப் பயணத்தில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
நடிப்பைத் தாண்டி, பயிற்சி பெற்ற நடனக் கலைஞர், இசைக்கலைஞர் மற்றும் பாடகராகவும் விளங்கும் வைபவ், குதிரைச் சவாரி மற்றும் சிலம்பம் போன்ற கலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஒரு முழுமையான கலைஞராக தன்னை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் அவரது முயற்சி, அவரை சக நடிகர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது.
அவரது உழைப்புக்கான அங்கீகாரமாக, ‘யெல்லோ’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பிற்காக 2025-ஆம் ஆண்டின் Anna University Techno Fest விருதில் ‘சிறந்த அறிமுக நாயகன்’ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 26 முதல் வெளியாகவுள்ள ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ தொடர், வைபவ் முருகேசனின் வளர்ந்து வரும் கலைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய அத்தியாயமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து உழைப்பு, பொறுமை மற்றும் திறமையின் மூலம் முன்னேறி வரும் அவர், தமிழ் திரையுலகின் புதிய தலைமுறை நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார்.

From Yellow to Mammatiyaan Stars: Vaibhav Murugesan Continues His Rise as a Promising Young Talent
After earning appreciation for his performance in Yellow, actor Vaibhav Murugesan is gearing up for his next major outing with Mammatiyaan Stars, premiering on ZEE5 on June 26.
In an industry where overnight success often grabs headlines, it is the artists who steadily build their careers through dedication, perseverance, and consistent performances who leave a lasting impact. Among the emerging talents making a mark in Tamil entertainment, Vaibhav Murugesan is steadily carving out a space for himself.
Following the success and recognition he received for his performance in Yellow, Vaibhav is set to entertain audiences once again with Mammatiyaan Stars, a ZEE5 Original web series directed by Sabir Sudhakar. The series will premiere exclusively on ZEE5 on June 26.
Mammatiyaan Stars follows a group of cricket-loving youngsters from a village who travel to Chennai with dreams of achieving something big. However, their journey takes an unexpected turn when they become victims of a scam. What follows is a compelling mix of challenges, clever survival strategies, friendship, humor, emotions, and determination as they attempt to find a way forward.

The series features an ensemble cast including Vaibhav Murugesan, Venkat Balamurali, Jaga, Lavanya, Sharath Ravi, and Vivek Prasanna in pivotal roles. Blending comedy, friendship, aspirations, and emotional moments, the show promises to connect with audiences across age groups.
Vaibhav’s acting journey began at a very young age. From the age of ten, he actively participated in Tamil and English stage plays, building a strong foundation in performance arts. Inspired by the artistry of Michael Jackson and Prabhu Deva, his fascination with performance gradually evolved into a deep passion for acting and cinema.
Determined to refine his craft, Vaibhav underwent professional acting training and participated in various workshops, spending years preparing himself before opportunities arrived. His commitment to learning and growth has remained a defining aspect of his career.
His journey in Tamil cinema began with small but noticeable roles in films such as Petta, Comali, Dharala Prabhu, and Netrikann. Despite limited screen time, he managed to attract attention with his natural screen presence and performance. He further showcased his acting abilities through a supporting role in Kathir, proving his ability to leave a lasting impression even in brief appearances.
A major breakthrough came with the critically acclaimed web series Vadhandhi. Selected through an open audition process involving hundreds of participants, Vaibhav’s portrayal of Jones Durai earned praise from both audiences and critics, significantly increasing his visibility. He later expanded his fan base through projects such as Amaran and the youth-oriented web series Hey Leela.
More recently, Vaibhav took on his first major lead role in director Hari Mahadevan’s Yellow, co-starring Poornima Ravi. His sincere, emotionally grounded, and authentic performance received widespread appreciation and further strengthened his reputation as an actor capable of bringing depth and realism to his characters.
Beyond acting, Vaibhav is a trained dancer, musician, and singer. He has also trained in horse riding and Silambam, reflecting his commitment to continuously expanding his artistic abilities. His understanding of cinema extends beyond performance, encompassing music, storytelling, and the many elements that contribute to impactful filmmaking.
In recognition of his work, Vaibhav received the Best Debut Hero Award at the 2025 Anna University Techno Fest Awards for his performance in Yellow. The honor serves as another milestone in a career that continues to gain momentum.
With Mammatiyaan Stars set to premiere on June 26, Vaibhav Murugesan enters another exciting chapter in his professional journey. Through dedication, patience, and a relentless commitment to his craft, he is emerging as one of the most promising young actors in Tamil entertainment today.
As audiences await the release of Mammatiyaan Stars, Vaibhav’s story stands as an inspiring example of how perseverance, passion, and unwavering belief in one’s dreams can pave the way for lasting success.
