Saturday, April 18
Shadow

தமிழ் சினிமாவின் வரலாற்று முக்கிய படத்தில் நடிக்க மறுத்த சமந்தா

தமிழ் சினிமாவில் நடிகரின் பலம் தான் எப்போதும் ஓங்கி இருக்கும் அது இப்ப மட்டும் இல்லை சினிமா ஆரம்பித்த நாளில் இருந்தே அதுவும் அந்த காலத்தில் நடிகைகள் என்றால் ஒரு கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்த்தனர் ஆனலும் அன்று நடிப்பில் மின்னிய நடிகை என்றால் பலர் அதில் குறிப்பாக நடிகை சாவித்திரி தான் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் என்றால் இவர் நடிகை திலகம் என்ற பட்டம் வாங்கியவர். சினிமாவில் எவ்வளவு புகழும் பெரும் வாங்கிய சாவித்திரி நிஜ வாழ்கையில் பல போராட்டங்கள் நிறைந்து அதுவும் அவரின் இறுதி காலம் மிகவும் போராட்டமானது.

பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதில் சாவித்ரி வேடத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார் சமந்தா. அவரிடம் பட குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். பட குழுவினரும் வேகமாக அடுத்த கட்ட பணிகளை தொடங்கினர். திடீரென்று சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார் சமந்தா.

இக்கதாபாத்திரத்துக்காக குண்டான தோற்றத்துக்கு மாற வேண்டும் என்று இயக்குனர் கூறியதே மறுப்புக்கு காரணம். விரைவில் நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயிக்கப்படவுள்ள நிலையில் திடீரென்று உடலில் வெயிட்போட்டால் அது பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் இம்முடிவை அவர் எடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அதேபடத்தில் மற்றொரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க சம்மதித்திருக்கிறார்.

சமந்தா விலகியதையடுத்து சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நித்யா மேனன், வித்யாபாலன் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே இருவரும் ‘வெயிட்’டான தோற்றத்தில் இருப்பதால் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக வித்யாபாலன், கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடித்திருக்கிறார். டர்ட்டி பிக்சர் பெயரில் உருவான அப்படம் அவருக்கு திரையுலகில் பெரிய திருப்பத்தை தந்ததுடன் தேசிய விருதும் பெற்றுத் தந்தது. சாவித்ரி கதாபாத்திரம் பல மடங்கு வலுவானது. அதில் நடிக்க வித்யா பாலன் பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை முதல் சாய்ஸாக பட குழு அணுகி உள்ளது. இதற்கு வித்யாபாலன் சம்மதம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply