
ஒரு கட்சியும் வேண்டாம் பதவியும் வேண்டாம் என்று சொல்லி வந்த ரஜினிகாந்த தற்போது தமிழக அரசியல் நிலையை குறித்து புது கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டு வேலைகளை ஆரபித்து விட்டதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளது .
பலர் பல முறை அரசியலுக்கு வர சொல்லை அழைத்த பொது எல்லாம் வராத ரஜினிகாந்த் தற்போது புது கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் என்று சொல்லபடுகிறது இதற்கு காரணம் இன்றைய அரசியல்நில தான் நாடும் நட்டு மக்களும் மிகுந்த வேதனையில் உள்ளனர் இதனால் தான் அவர் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் , அது மட்டும் இல்லாமல் இவ்வளவு நாள் சோ துக்களக் ஆசிரியர் தான் ரஜினியை தடுத்ததாகவும் என்றும் கிசுகிசுக்க படுகிறது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் இல்லாத அளவு தற்போது 2.0, ரஞ்சித் படம் என ஒரேநேரத்தில் இரு படங்களில் கமிட்டாகி விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகதான் அவர் அரசியலுக்கு வருவது பற்றிய செய்தி மீடியாக்களில் வருவது குறைந்திருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் சூழலை மனதில்கொண்டு இவர் ஒரு புதிய கட்சியை தொடங்கப்போவதாக இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கட்சியில் பிஜேபியை சேர்ந்து முக்கிய பிரமுகர் ஒருவர் ரஜினியுடன் இணைவார் எனவும் அந்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் ரஜினி தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
