Monday, May 12
Shadow

“ ஏ பி சி டி – தீபாவளி கொண்டாட்டம்”

மெட்ராஸ் மெட்ரோ லேடீஸ் சர்க்கல் 70 (MMLC 70) சார்பாக ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் ஆதரவற்ற முதியோருக்கு உதவும் வகையில் “ ஏ பி சி டி – தீபாவளி கொண்டாட்டம்” என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

ரௌன்ட் டேபிள் இந்தியா அமைப்பின் அங்கமான மெட்ராஸ் மெட்ரோ லேடீஸ் சர்க்கல் 70 சார்பில் திருமதி.இஷிதா “ ஏ பி சி டி – தீபாவளி கொண்டாட்டம்” நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நானூறுக்கும் மேற்ப்பட்ட சிறார்கள் கலந்துகொண்டு ஆடல், பாடல், கைவினை பொருட்கள், உடை அலங்கார போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பங்கேற்ற குழந்தையும் தனக்கு பிடித்த ஒரு விளையாட்டு பொருளை வசதியற்ற குழந்தைகளுக்காக பெருமகிழ்வுடன் தானம் செய்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இஷிதா கூறுகையில் “ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு ஆதரவு கூடிக்கொண்டே வருகிறது. இங்கே வந்திருக்கும் அனைத்து குழந்தைகளுக்குள்ளும் உதவி செய்யும் எண்ணத்தை விதைக்கும் நோக்கிலேயே இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழை சிறார் கல்விக்கு மற்றும் ஆதரவற்ற முதியோர் நலனுக்காக செலவு செய்யப்படும்” எனக் கூறினார்

Leave a Reply