Saturday, May 23
Shadow

வெர்டிகல் சினிமா, மைக்ரோ டிராமா, AI தொழில்நுட்பம், IP பாதுகாப்பு — தமிழ் பொழுதுபோக்கு உலகின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக புதிய கூட்டணி உருவாகியது

வெர்டிகல் சினிமா, மைக்ரோ டிராமா, AI தொழில்நுட்பம், IP பாதுகாப்பு — தமிழ் பொழுதுபோக்கு உலகின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக புதிய கூட்டணி உருவாகியது

சென்னையில் தமிழ் சினிமா மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்திய ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கேமிங் கவுன்சில் (ICMEG) தனது தமிழ்நாடு கிளையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியதுடன், தயாரிப்பாளர்கள், OTT நிறுவன நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் AI துறை நிபுணர்கள் ஒரே மேடையில் கலந்துரையாடினர்.

ஐஐடிஎம் ரிசர்ச் பார்க்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு சாதாரண அமைப்பு தொடக்க விழாவாக இல்லாமல், தமிழ் திரையுலகின் எதிர்காலத்தைப் பற்றிய தீவிர ஆலோசனை கூட்டமாகவே அமைந்தது. குறிப்பாக, தற்போது வேகமாக வளர்ந்து வரும் “வெர்டிகல் சினிமா”, “மைக்ரோ டிராமா”, குறுந்தொகுப்பு உள்ளடக்கங்கள் போன்ற புதிய வடிவங்கள் குறித்து தயாரிப்பாளர்களிடையே அதிக ஆர்வம் காணப்பட்டது.

தமிழ் திரையுலகில் உருவாகும் உள்ளடக்கங்கள் உலகளாவிய டிஜிட்டல் சந்தைகளில் எவ்வாறு வணிகமாக மாற்றப்படலாம், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிப்பு செலவுகளை எவ்வாறு குறைக்கலாம், படைப்புரிமை திருட்டுகளை எவ்வாறு தடுக்கலாம் போன்ற பல முக்கிய அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சன் நெக்ஸ்ட், ஜீ புல்லட், ஈநாடு டெலிவிஷன், ETV Win, PhantomFX, Vels Film International உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

மேலும், தமிழ் தயாரிப்பாளர்கள் இனி பாரம்பரிய திரையரங்கு வெளியீட்டை மட்டுமே நம்பாமல், குறும்பட வடிவங்கள், மொபைல்-பிரண்ட்லி காட்சியமைப்புகள் மற்றும் புதிய OTT வருவாய் மாதிரிகள் நோக்கி நகர வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு AI Association மற்றும் ICMEG இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன் மூலம், எதிர்காலத்தில் தமிழ் படைப்பாளிகளுக்கு AI பயிற்சிகள், IP பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் சர்வதேச தரத்தில் உள்ளடக்க உருவாக்க உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ICMEG தமிழ்நாடு கிளையை வழிநடத்த உள்ள வெங்கடேஷ் ராஜேந்திரன், “தமிழ்நாடு எப்போதுமே கதையாடலில் முன்னோடி. இனி டிஜிட்டல் உலகத்திலும் தமிழ் உள்ளடக்கங்கள் பெரிய அளவில் செல்ல வேண்டும். அதற்கான தொழில்நுட்ப மற்றும் வணிக தளத்தை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம்,” என்று தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில், தமிழ் சினிமாவை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் புதிய கூட்டுத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களும் நடைபெற்றன. AI, OTT, Gaming மற்றும் சினிமா இணையும் புதிய காலத்திற்கான ஆரம்பமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

A powerful new collaboration emerges to shape the future of Tamil entertainment through vertical cinema, micro dramas, AI technology, and IP protection


A major industry gathering focused on the future of Tamil cinema and digital entertainment took place in Chennai as the Indian Council for Media, Entertainment & Gaming (ICMEG) officially launched its Tamil Nadu chapter. The event brought together film producers, OTT platform executives, technology experts, and AI professionals under one roof to discuss the next phase of the entertainment industry.

Held at IITM Research Park, the event was more than just an organisational launch — it turned into a serious conversation about the future direction of Tamil content creation. Emerging formats such as vertical cinema, micro dramas, and short-form storytelling became key highlights of the discussions, reflecting the rapid transformation happening in digital entertainment.

Industry leaders explored how Tamil content can expand into global digital markets, how Artificial Intelligence can help reduce production costs, and how creators can better protect their intellectual property rights in an increasingly digital ecosystem.

Executives from leading media and entertainment companies including SUN NXT, Zee Bullet, Eenadu Television, ETV Win, PhantomFX, and Vels Film International participated in the discussions and shared their industry insights and experiences.

Speakers also stressed that Tamil producers can no longer depend only on traditional theatrical releases, and must actively explore mobile-first storytelling formats, short-form content, and new OTT-driven revenue opportunities.

The event also witnessed the signing of an MoU between the Tamil Nadu AI Association and ICMEG. Through this collaboration, creators are expected to receive future support in AI training, IP protection guidance, and international-standard content development practices.

Speaking at the event, Venkatesh Rajendran, who will lead the ICMEG Tamil Nadu chapter, said, “Tamil Nadu has always been a pioneer in storytelling. The next step is ensuring Tamil content reaches global digital audiences, and our goal is to create the right technological and business ecosystem to make that happen.”

The event concluded with discussions around upcoming collaborative projects aimed at taking Tamil cinema to wider international markets. Industry experts believe this initiative marks the beginning of a new era where AI, OTT platforms, gaming, and cinema will increasingly work together to redefine entertainment.