Thursday, April 30
Shadow

இந்திய ரேசிங் உலகின் பெருமை தருணம் – நடிகர் அஜித் குமார் மகிந்திரா பிஇ 6 ஃபார்முலா ஈ எடிஷன் காரை சொந்தமாக்கினார்!

இந்திய ரேசிங் உலகின் பெருமை தருணம் – நடிகர் அஜித் குமார் மகிந்திரா பிஇ 6 ஃபார்முலா ஈ எடிஷன் காரை சொந்தமாக்கினார்!

இந்திய மோட்டார்ஸ்போர்ட் உலகில் முக்கியமான தருணமாகக் கருதப்படும் ஒரு நிகழ்வு தற்போது கவனம் ஈர்த்துள்ளது. சர்வதேச கார் ரேசரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான அஜித் குமார், மகிந்திரா நிறுவனத்தின் சிறப்பு பதிப்பான BE 6 Formula E Edition மின்சார எஸ்யுவி காரை தனது தனிப்பட்ட சேகரிப்பில் இணைத்துள்ளார்.

மகிந்திரா நிறுவனத்தின் ஃபார்முலா ஈ ரேசிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பிரத்யேக பதிப்பு எஸ்யுவி, உலகளாவிய மோட்டார்ஸ்போர்ட் மரபை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், ரேசிங் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் குமார் இந்த காரை தேர்வு செய்திருப்பது ரசிகர்கள் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினின் ஆண்டலூசியா சர்க்யூட்டில் நடைபெற்ற முக்கியமான டெஸ்ட் டிரைவ் நிகழ்வில், அஜித் குமார் ஜென்-2 தொழில்நுட்பம் கொண்ட முழுமையான மின்சார சிங்கிள் சீட்டர் ஃபார்முலா ஈ ரேஸ் காரை ஓட்டியிருந்தார். அப்போது உலக சாம்பியன் நைக் டி வரீஸ் உடன் இணைந்து பெற்ற அனுபவம், அவரின் ரேசிங் ஆர்வத்தையும் தொழில்முறை திறனையும் மேலும் வலுப்படுத்தியது. அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாகவே அவர் BE 6 Formula E Edition காரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.


திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கார் ரேசிங்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது அஜித் குமாரின் தனித்துவமான அடையாளமாகும். Formula BMW Asia, British Formula 3, FIA Formula 2 Championship உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்று அனுபவம் பெற்றுள்ளார்.
மேலும், தனது சொந்த அணியான Ajith Kumar Racing மூலம் அவர் மீண்டும் சர்வதேச ரேசிங் அரங்கில் வெற்றிகரமாக திரும்பியுள்ளார்.

2025ஆம் ஆண்டு நடைபெற்ற Dubai 24H Endurance Race போட்டியில் 991 பிரிவில் P3 இடத்தைப் பெற்றதுடன், Creventic 24H European Championship 2026 தொடரில் Mugello சுற்றில் P3 மற்றும் Spa-Francorchamps சுற்றில் P2 இடங்களைப் பெற்றது அவரது அணியின் சிறப்பான சாதனைகளாகும்.

மகிந்திராவின் BE 6 Formula E Edition, உலகில் முதன்முறையாக ஃபார்முலா ஈ தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் சிறப்பு பதிப்பு எஸ்யுவியாக உருவாக்கப்பட்டுள்ளது. FIA Formula E World Championship-இல் மகிந்திரா பங்கேற்ற பன்னிரண்டு சீசன்களுக்கு நினைவாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

282 bhp திறன் கொண்ட ரியர்-டிரைவ் மின்சார மோட்டார் மற்றும் 380 Nm டார்க் திறனுடன், இந்த கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் எட்டும் திறன் பெற்றுள்ளது. 79 kWh பேட்டரி, 180 kW அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, Firestorm Orange Track டிசைன் மற்றும் பிரீமியம் லெதரெட் உள் அலங்காரம் போன்ற அம்சங்களுடன் உயர் செயல்திறனும் மேம்பட்ட மின்சார இயக்க அனுபவமும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேர்க்கை மூலம் இந்தியாவின் மோட்டார்ஸ்போர்ட் உலகையும் மின்சார வாகன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய தருணம் உருவாகியுள்ளது. நடிகர் அஜித் குமாரின் இந்த தேர்வு, ரேசிங் உலகில் அவரது தொடர்ந்த ஈடுபாட்டையும் தொழில்நுட்பத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தையும் மீண்டும் உறுதி செய்கிறது.

A Proud Moment for Indian Motorsport – Actor Ajith Kumar Acquires the Mahindra BE 6 Formula E Edition!

A remarkable moment in Indian motorsport has drawn widespread attention. International racer and leading Tamil film actor Ajith Kumar has added the special edition Mahindra BE 6 Formula E Edition electric SUV to his personal collection.

Inspired by Mahindra’s Formula E racing technology, this exclusive edition SUV reflects the brand’s global motorsport legacy. Known for his deep passion for racing, Ajith Kumar’s choice of this vehicle has generated excitement among fans and motorsport enthusiasts alike.

In October last year, during a major test session at the Andalusia Circuit in Spain, Ajith Kumar drove a fully electric Gen2-spec Formula E single-seater race car. During that session, he gained valuable experience alongside Nyck de Vries, the Season 7 Formula E World Champion. That experience highlighted Ajith’s professional racing passion and technical interest, which is believed to have influenced his decision to choose the BE 6 Formula E Edition.

While Ajith Kumar is one of the leading stars of Tamil cinema, he has also built a strong identity in motorsport for more than two decades. Over the years, he has competed in several international racing series including Formula BMW Asia, British Formula 3, and the FIA Formula 2 Championship.

Recently, he made a successful return to international racing through his own team, Ajith Kumar Racing. The team secured impressive results, including P3 in the 991 category at the 2025 Dubai 24H Endurance Race, P3 at the Mugello round, and P2 at the Spa-Francorchamps round in the Creventic 24H European Championship 2026 series.

The Mahindra BE 6 Formula E Edition is the world’s first special-edition SUV inspired by Formula E technology. It has been created to celebrate Mahindra’s participation in twelve seasons of the FIA Formula E World Championship.

Powered by a 282 bhp rear-drive electric motor delivering 380 Nm of torque, the SUV can accelerate from 0–100 km/h in just 6.7 seconds. It also features a 79 kWh battery pack, 180 kW ultra-fast charging capability, a distinctive Firestorm Orange Track design, and a premium leatherette interior, offering both high performance and a refined electric driving experience.

With this acquisition, Ajith Kumar once again demonstrates his enduring connection with motorsport and advanced automotive technology, bringing together India’s racing spirit and the future of electric mobility.