Monday, April 20
Shadow

“யூத்” முன் வெளியீட்டு விழா: இளம் இயக்குநர் கென் கருணாஸுக்கு திரை உலகின் உற்சாக ஆதரவு!

“யூத்” முன் வெளியீட்டு விழா: இளம் இயக்குநர் கென் கருணாஸுக்கு திரை உலகின் உற்சாக ஆதரவு!

பள்ளி பருவத்தின் நினைவுகள், நட்பு, கனவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “யூத்” திரைப்படம், மார்ச் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார்.

‘அசுரன்’, ‘விடுதலை 2’ போன்ற படங்களின் மூலம் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்ததுடன் இயக்குநராகவும் புதிய அடையாளம் பெற்றுள்ளார். பள்ளி வாழ்க்கையின் உணர்வுகளை கலகலப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லும் இத்திரைப்படத்தில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, நளினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், தனது இளமைத் ததும்பும் இசையால் படத்திற்கு தனித்துவமான நிறத்தை சேர்த்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘முட்ட கலக்கி’, ‘பறந்தனே பெண்ணே’, ‘ஆச புள்ள’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. படக்குழுவினருடன் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு இளம் இயக்குநர் கென் கருணாஸுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நளினி: “இந்த படம் மீண்டும் சினிமாவுக்கு என்னை இழுத்துவந்தது”

நடிகை நளினி, “நான் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் கருணாஸ் சார் மற்றும் கென் என்னை அழைத்து இந்தப் படத்தில் நடிக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் சிறிய வேடம் என்று நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பின் போது கிடைத்த அனுபவம் மிகவும் புதிதாக இருந்தது. அவர்களின் அர்ப்பணிப்பை பார்த்தபோது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது” என்றார்

.தேவதர்ஷினி: “நடிகர் கெனை விட இயக்குநர் கென் அதிகம் பேசப்படுவார்”

நடிகை தேவதர்ஷினி, “கென் கருணாஸை ஒரு நடிகராக பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு இயக்குநராக இன்னும் பெரிய அளவில் பேசப்படுவார். ஜி.வி. பிரகாஷ் இசையும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும்” என்று கூறினார்.

மீனாட்சி தினேஷ்: “இந்த மேடையில் நிற்பது கனவு நனவானது”

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மகிழ்ச்சியை பகிர்ந்த மீனாட்சி தினேஷ், “என் வாழ்க்கையில் லக் இல்லை என்று நினைத்தேன். ஆனால் கெனை சந்தித்த பிறகு அந்த எண்ணம் மாறிவிட்டது. இந்த வாய்ப்பை அளித்ததற்கு அவருக்கு நன்றி” என்றார்.

பிரியன்ஷி யாதவ்: “இந்த படம் எங்களுக்கு ஒரு கனவு திட்டம்”

பிரியன்ஷி யாதவ், “தமிழ் மொழி தெரியாதிருந்தாலும் படக்குழுவினர் அனைவரும் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்கள். இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அனிஷ்மா: “கென் இந்த வயதிலேயே மிகப் பெரிய முயற்சி செய்துள்ளார்”

அனிஷ்மா, “இந்த வயதிலேயே கென் இப்படியொரு படத்தை உருவாக்கியிருப்பது பெருமை. இந்த படம் அவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.

சுராஜ்: “கென் கதையை சொன்ன விதமே என்னை கவர்ந்தது”

மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, “கென் கதையை சொன்ன விதமே மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு கேரக்டரையும் உணர்ச்சியுடன் விளக்கினார். இந்த படம் கண்டிப்பாக மக்களை கவரும்” என்று தெரிவித்தார்.

கருணாஸ்: “இந்த மேடையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருப்பது பெருமை”

நடிகர் கருணாஸ், “கெனை நடிகராக அறிமுகப்படுத்தியது வெற்றிமாறன். இயக்கம் கற்க வாய்ப்பு கிடைக்க காரணம் தனுஷ். இன்று இந்த இருவரும் வந்து அவனை வாழ்த்துவது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி” என்றார்.

ஜி.வி. பிரகாஷ்: “இது ஒரு கலகலப்பான யூத் படம்”

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், “பள்ளி பின்னணியில் இளைஞர்களின் வாழ்க்கையை சொல்லும் ஒரு கலகலப்பான படம் இது. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்” என்று கூறினார்.

வெற்றிமாறன்: “ஒரு நல்ல டீமை உருவாக்குவது இயக்குநரின் மனநிலையே”

இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு படக்குழு இவ்வளவு ஒன்றுபட்டு வேலை செய்வது அரிது. கென் கதை சொன்ன விதம் மிகவும் மெட்டிக்குலஸாக இருந்தது. அவர் நடிகராகவும் இயக்குநராகவும் வளர்வார்” என்று பாராட்டினார்.

தனுஷ்: “23 வயது இளைஞனின் கதையை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளருக்கு பாராட்டு”

நடிகர் தனுஷ், “இளம் வயதில் இப்படியொரு பொறுப்புடன் படம் எடுப்பது பெரிய விஷயம். இந்தப் படம் வெற்றி பெற்றால் அதன் முதல் உரிமையாளர் தயாரிப்பாளர் கருப்பையாதான். கென் தனது கனவுக்காக முழு கவனம் செலுத்தியிருக்கிறார். இந்த ‘யூத்’ படம் பெரிய வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார்.

கென் கருணாஸ்: “என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி”

இயக்குநர் மற்றும் நடிகர் கென் கருணாஸ், “இந்தப் படத்தில் என்னை நம்பி பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றி. இந்த படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் வந்து ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார்.

பள்ளி பருவத்தின் நினைவுகளையும் இளமை உற்சாகத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “யூத்” திரைப்படம், மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

“Youth” Pre-Release Event: Film Industry Extends Strong Support to Young Director Ken Karunas

The upcoming film “Youth”, which revolves around school life, friendship, and youthful dreams, is all set to release in theatres worldwide on March 19. The film is produced by Karuppaiah C. Ram under the banner of Parvatha Entertainment.

Actor Ken Karunas, who was introduced to Tamil cinema through films like Asuran and Viduthalai 2, plays the lead role in the movie and also makes his debut as a director with this project. The film portrays the emotions and fun moments of school life in an entertaining and heartfelt manner.

The movie features Anishma, Meenakshi Dinesh, and Priyanshi Yadav as the female leads. Devadarshini, Suraj Venjaramoodu, and Nalini appear in important supporting roles.

Music for the film is composed by G. V. Prakash Kumar, whose youthful and energetic soundtrack has already created excitement among fans. The songs “Mutta Kalakki,” “Paranthene Penne,” and “Aasa Pulla” have been released and have received a positive response from audiences.

Ahead of the film’s release, the grand pre-release event was held in the presence of the cast, crew, media, and several prominent personalities from the film industry, who extended their support and appreciation to the young filmmaker

.Nalini: “This film brought me back to cinema”

Actress Nalini said, “I had decided that I would no longer act in films. But Karunas sir and Ken invited me to be part of this movie. Initially, I thought it was a small role, but while working on the film, I had a completely new experience. The team treated me with great care and helped enhance my performance. It made me feel like acting in films again.

Devadarshini: “Director Ken will be praised more than Actor Ken”

Actress Devadarshini said, “We have seen Ken Karunas as an actor, but through this film he will shine even more as a director. G. V. Prakash’s music is also a great strength for the film.”

“Meenakshi Dinesh: “Standing on this stage feels like a dream come true”

Actress Meenakshi Dinesh expressed her happiness about entering Tamil cinema. “I always felt that luck was not on my side, but after meeting Ken, I feel like luck has finally come my way. I thank him for giving me this opportunity.

Priyanshi Yadav: “This film is a dream project for us”

Actress Priyanshi Yadav said, “Even though I did not know Tamil, the entire team treated me with great warmth. This film is very special to us, and we hope audiences will support it in theatres.

Anishma: “Ken has worked incredibly hard at such a young age”

Actress Anishma said, “Ken has worked very hard to create this film at such a young age. I believe this movie will bring a big change in his life and career.

.”Suraj: “The way Ken narrated the story impressed me”

Actor Suraj Venjaramoodu said, “When Ken narrated the story, he explained each character with great emotion and clarity. I felt like I was already watching the film. I believe the audience will definitely enjoy this movie.”

“Karunas: “Having Dhanush and Vetrimaaran together here is a proud moment”

Actor Karunas said, “Vetrimaaran introduced Ken as an actor, and Dhanush gave him the opportunity to learn filmmaking. Seeing both of them here to support him is a very proud and emotional moment for us

.”G. V. Prakash Kumar: “This is a fun youthful entertainer”

Music composer G. V. Prakash Kumar said, “This is a lively film set in a school backdrop that portrays the lives of young boys in an entertaining way. Everyone in the film has performed brilliantly.

Vetrimaaran: “A united team is the strength of a film”

Director Vetrimaaran said, “It is rare to see a film unit working together with such positivity. Ken narrated the story in a very detailed and meticulous manner. I believe he will grow both as an actor and a director.

Dhanush: “It takes courage to trust a 23-year-old’s story”

Actor Dhanush said, “I appreciate producer Karuppaiah for believing in the story told by a 23-year-old filmmaker. Even if the film becomes a big success tomorrow, the first credit should go to the producer for showing that courage.

Ken Karunas: “My heartfelt thanks to everyone who believed in me”

Director and actor Ken Karunas said, “I thank all the artists and technicians who trusted me and worked on this film. Without them, this movie would not have been possible. ‘Youth’ will be released in theatres on March 19, and I request everyone to watch and support it.”

The film “Youth,” which captures the spirit, emotions, and fun moments of school life, will hit theatres worldwide on March 19.