Tuesday, April 21
Shadow

விஜய்யின் சர்க்கார் படத்துக்காக முதல் முறையாக தீம மியூசிக் போட்ட ஏ.ஆர்.ரகுமான்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதுவரை ‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘மெர்சல்’ என விஜய் படங்களில் மூன்றுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘சர்கார்’ தான் நான்காவது படம். இந்த மூன்று படங்களிலுமே விஜய்க்காக தீம் மியூஸிக் எதுவும் போடவில்லை ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில், ‘சர்கார்’ படத்தில் விஜய்க்காக ஸ்பெஷல் தீம் மியூஸிக் ஒன்றைப் போட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘சர்கார்’ படத்தின் மோஷன் போஸ்டரில் அந்த தீம் மியூஸிக்கின் சிறிய பகுதி மட்டும் இடம்பெற்றது. இந்த தீம் மியூஸிக்குக்கான மாண்டேஜ் காட்சிகள், அமெரிக்க மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸில் படமாக்கப்பட இருக்கிறது.