
‘அலங்காநல்லூரில் வேரில் அமர்ந்து போராடும் என் சகோதரர்கள் சார்பாக பேசுகிறேன். என் சகோதரர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின்,ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அது தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்களுக்கு பயத்தைத் தருகிறது அது மட்டும் இல்லாமல் உணர்வுகளை தவறான பாதையில் போகும் அளவில் மதகலவரம் அந்நியர்களுக்கு விளக்கு போகும் அளவில் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
இங்கு குழுமியிருக்கும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்று சில புள்ளிகள் செய்யும் வேலை தான் இது என்று நினைக்கிறேன். லட்சம் பேர் கூடும் இடங்களில், 4 பேர் குழப்பத்தை ஏற்படுத்தத்தான் செய்வார்கள். அந்த குழப்பத்தை விளைவிக்கும் சிலபுள்ளிகளின் மேல் கோபம் இருந்தால் ஹிப்ஹாப்தமிழா ஆதி அமைதியாக இருந்து இருக்கலாம். ஏனெனில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இதை முன்னெடுத்த நாமே, போராட்டம் திசைதிரும்புகிறது என நினைத்து பின்வாங்குவது ஏற்புடையது அல்ல. என் சகோதரிகள்,தாய்மார்கள் பலர் கலந்துகொண்டு நடக்கும் மிக கண்ணியமான போராட்டம் இது. எனவே,ஹிப்ஹாப் தமிழா ஆதி, நம்மை மக்கள்… எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்’ என நடிகர் சமுத்திரக்கனி ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
