Friday, May 1
Shadow

அதிரடி, காலப்பின்னணி, குடும்ப உணர்வு – ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரசிகர்களை கவர்ந்தது!

அதிரடி, காலப்பின்னணி, குடும்ப உணர்வு – ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரசிகர்களை கவர்ந்தது!

மலையாள திரையுலகில் தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி – நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் புதிய முயற்சி ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி, ஒரு வித்தியாசமான திரை அனுபவத்துக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

வெளியான டீசர் முழுவதும் அதிரடியான சண்டைக் காட்சிகளும், காலப்பின்னணியில் உருவாக்கப்பட்ட காட்சியமைப்புகளும் முக்கிய அம்சங்களாகத் திகழ்கின்றன. இது சாதாரண ஆக்சன் படம் அல்ல, உணர்ச்சிகளும் கதாபாத்திரங்களும் கலந்த முழுமையான வணிகத் திரைப்படமாக இருக்கும் என்பதற்கான சுட்டுகாட்டை டீசர் வழங்குகிறது.

இப்படத்தில் டொவினோ தாமஸுடன் அனுபவம் வாய்ந்த நடிகர் விஜயராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கயாடு லோஹர் இணைந்துள்ளார். இதுவரை வெளியான டீசருடன், குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், ‘காட்டு செம்பகம்’ பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. இந்தப் பாடல், இசை மற்றும் உணர்ச்சி ஆகிய இரண்டையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், டிஜோ ஜோஸ் ஆண்டனி – ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் முந்தைய படைப்புகள் ‘குயின்’, ‘ஜன கண மன’, ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ஆகியவை இசை மற்றும் உள்ளடக்க ரீதியாகவும் வெற்றி பெற்றதால், இந்த கூட்டணியின் மீண்டும் இணைவு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும், இப்படம் IMDb-யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் இயக்குநரின் முந்தைய படைப்பை இந்தியாவின் பிரபல இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி பாராட்டியது, இந்த படத்திற்கான கவனத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

எஸ். சுரேஷ் பாபு எழுதிய கதைக்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஏப்ரல் 10 முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உலகளவில் வெளியாகிறது.

மொத்தத்தில், ‘பள்ளிச்சட்டம்பி’ — அதிரடி, உணர்ச்சி, மற்றும் பெரிய திரை அனுபவம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் வழங்கும் வலுவான திரைப்படமாக உருவாகி வருவது டீசர் மூலம் உறுதியாகியுள்ளது.

Action, Period Backdrop & Emotion – ‘Pallichattambhi’ Teaser Grabs Attention!

‘Pallichattambhi,’ the latest film from director Dijo Jose Antony and actor Tovino Thomas, has created a strong buzz with the release of its teaser, promising a refreshing cinematic experience.

The teaser is packed with intense action sequences and visually rich period elements, hinting that the film goes beyond a typical action entertainer. It suggests a well-rounded commercial film that blends emotion, strong characters, and gripping storytelling.

Alongside Tovino Thomas, veteran actor Vijayaraghavan plays a significant role, while Kayadu Lohar appears as the female lead. In addition to the teaser, the makers have also released an emotional family song, which has been well received by audiences.

Music for the film is composed by Jakes Bejoy, and the track “Kaatu Chembakam” is already trending, resonating with listeners through its emotional depth and musical appeal.

Notably, ‘Pallichattambhi’ marks the fourth collaboration between Dijo Jose Antony and Jakes Bejoy. Their previous films—Queen, Jana Gana Mana, and Malayali from India—were widely appreciated for both content and music, raising expectations for this reunion.

The film has also secured a place on IMDb’s list of most anticipated movies. Additionally, the director gained widespread attention when acclaimed filmmaker S. S. Rajamouli praised his earlier work, further elevating interest in this project.

Written by S. Suresh Babu and shot by cinematographer Tijo Tomy, the film is produced by World Wide Films in association with C Qube Bros Entertainment. ‘Pallichattambhi’ is set for a worldwide theatrical release on April 10 in five languages—Tamil, Malayalam, Telugu, Kannada, and Hindi.

Overall, the teaser makes it clear that ‘Pallichattambhi’ is shaping up to be a powerful blend of action, emotion, and grand cinematic storytelling.