வரும் தீபாவளிக்கு கார்த்தி இரசிகர்களுக்கும் தனுஷ் இரசிகர்களுக்கும் தான் கலர் புல் தீபாவளி!!
நடிகர் கார்த்தி கோகுலுடன் முதன் முதலில் கை கோர்த்து அதிக பொருட்செலவில் பிரம்மாண்ட முறையில் உருவாகி உள்ள படம் கஷ்மோரோ!!
தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார் இப்படம் வரும் அக்டோபர் 28-ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து மொத்தம் 1700 திரையரங்குகளில் வெளியாகிறதாம். இது கார்த்தி கேரியரில் ஒரு மிகப்பெரிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது