
நடிகர் விஜய், சமீபத்தில் நடந்த ‘சர்க்கார்’ இசை வெளியீட்டு விழாவில், தமிழகத்தில் அரசியல் நிலவரம் குறித்து பேசியதோடு, ‘தான் முதல்வரானால், ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்பேன், நடிக்க மாட்டேன், ஊழலை முழுமையாக ஒழிப்பேன்’ என்றும் சொல்லி, தமிழக அரசியல்வாதிகளை ரொம்பவே உசுப்பேத்தினார்.
இதில், ஆளும் தரப்பினர் நடிகர் விஜய் மீது கடும் கோபம் அடைந்தனர். நடிகர் விஜய்யை, அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், நடிகர் கருணாகரன், நடிகர் விஜய்யின் ‘சர்க்கார்’ பட விழா பேச்சுக் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என கருணாகரன் பதிவிட, விஜய்யின் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் வசைபாட, கடுப்பாக இருந்தால் கம்முன்னு இருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என பதிவிட்டிருக்கிறார். மேலும் ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் கருத்துகளே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்து விடுகிறது என கூறியிருக்கிறார்.
இதற்கு விஜய் ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளங்களில் கொச்சையாகவும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால், எரிச்சல் ஆன நடிகர் கருணாகரன், ‘தமிழகத்தை தூய்மைப்படுத்துவதற்கு முன், நடிகர் விஜய், தனது ரசிகர்களை சுத்தப்படுத்த வேண்டும்’ என்று கேட்டு, நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதமாகி இருக்கிறது.
கருணாகரன், விஜய் ரசிகர்களின் மோதல் உச்சக்கட்டத்தை எட்ட, கருணாகரனுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் போலீஸ் புகார் அளிக்க உள்ளார்.
