விஜயை வம்புக்கு இழுக்கும் காமெடி நடிகர் கருணாகரன்
நடிகர் விஜய், சமீபத்தில் நடந்த 'சர்க்கார்' இசை வெளியீட்டு விழாவில், தமிழகத்தில் அரசியல் நிலவரம் குறித்து பேசியதோடு, 'தான் முதல்வரானால், ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்பேன், நடிக்க மாட்டேன், ஊழலை முழுமையாக ஒழிப்பேன்' என்றும் சொல்லி, தமிழக அரசியல்வாதிகளை ரொம்பவே உசுப்பேத்தினார்.
இதில், ஆளும் தரப்பினர் நடிகர் விஜய் மீது கடும் கோபம் அடைந்தனர். நடிகர் விஜய்யை, அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், நடிகர் கருணாகரன், நடிகர் விஜய்யின் 'சர்க்கார்' பட விழா பேச்சுக் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என கருணாகரன் பதிவிட, விஜய்யின் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் வசைபாட, கடுப்பாக இருந்தால் கம்முன்னு இருக்க வேண்டு...