Friday, November 7
Shadow

நடிகர் மோகன் பிறந்த தின பதிவு

மோகன் ஓர் புகழ்பெற்ற கோலிவுட் நடிகர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார். தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார்.

இவர் நடித்த படங்கள்: வந்தா மல, மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், காதோடுதான் நான் பேசுவேன், கடவுளுக்கு ஓர் கடிதம், இதோ வருகிறேன், காதலித்துப் பார், தீராத விளையாட்டுப் பிள்ளை, பயணங்கள் முடிவதில்லை, லாட்டரி டிக்கெட், சின்னஞ் சிறுசுகள், கோபுரங்கள் சாய்வதில்லை, இனியவளே வா, 23, நெஞ்சமெல்லாம் நீயே, அந்த சில நாட்கள், மனைவி சொல்லே மந்திரம், நாலு பேருக்கு நன்றி, சரணாலயம், தூங்காத கண்ணொன்று ஒன்று, இளமை காலங்கள், ஓ மானே மானே, அன்பே ஓடி வா, நிரபராதி, நெஞ்சத்தை அள்ளித்தா, நலம் நலமறிய ஆவல், மகுடி, விதி, வாய் பந்தல், அம்பிகை நேரில் வந்தாள், 24 மணி நேரம், சாந்தி முகூர்த்தம், ஓசை, ருசி, சட்டத்தை திருத்துங்கள், நான் பாடும் பாடல், நூறாவது நாள், குவா குவா வாத்துகள், வேங்கையின் மைந்தன், பணம் பத்தும் செய்யும், அன்பின் முகவரி, அண்ணி, தெய்வப் பிறவி, நான் உங்கள் ரசிகன், உனக்காக ஒரு ரோஜா, தென்றலே என்னைத் தொடு, குங்குமச் சிமிழ், ஸ்ரீ ராகவேந்திரா, இதயக் கோயில், உதயகீதம், பிள்ளை நிலா, டிசம்பர் பூக்கள், பாரு பாரு பட்டணம் பாரு, உயிரே உனக்காக, உன்னை ஒன்று கேட்பேன், மௌன ராகம், மெல்லத் திறந்தது கதவு, ஆயிரம் பூக்கள் மலரட்டும், சங்கலயில் ஒரு சங்கீதம், , பாடு நிலாவே, ஒரே ரத்தம், நேரம் நல்லாருக்கு, தீர்த்த கரையினிலே, நினைக்க தெரிந்த மனமே, ரெட்டை வால் குருவி, ஆனந்த ஆராதனை , கிருஷ்ணன் வந்தான், இது ஒரு தொடர்கதை, சகாதேவன் மகாதேவன், வசந்தி, பாசப் பறவைகள் , குங்கும கோடு, நாளை மனிதன், பாச மழை, மனிதன் மாறிவிட்டான், மாப்பிள்ளை சார், தலைவனுக்கோர் தலைவி, இதய தீபம், சொந்தம் 16, ஒரு பொண்ணு நினைச்சா, வாலிப விளையாட்டு, ஜெகதால பிரதாபன், உருவம், அன்புள்ள காதலுக்கு, சுட்ட பழம்