
இவர் அவர், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2003வது வருடம், இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த சேவைகளுக்காக, இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கிக் கௌரவித்தது.
1980வது வருடம் ஹம் பாஞ்ச் என்ற படத்தில் நடித்தது முதல் இவர் வணிக ரீதியிலான பாலிவுட் படங்களிலும் ஈடுபடலானார். இவரது வணிக ரீதியிலான திரைப்படங்களில், குறிப்பிடும்படியான அளவில் மிகுந்த வெற்றி அடைந்த அடுத்த படம், 1986வது ஆண்டில் பல நட்சத்திரங்கள் நடித்த கர்மா வாகும். இதில் இவர் முதுபெரும் நடிகர் திலீப் குமார் உடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து, இஜாதத் (1987), ஜல்வா (1988), மற்றும் ஹீரோ ஹீராலால் (1988) ஆகிய படங்களில் நடித்தார். 1988வது வருடம் தனது மனைவி ரத்னா பதக்கின் ஜோடியாக, ஹெச்.ஆர்.எஃப்.கீடிங்கின் புதினங்களில் தோன்றும் புனைத் துப்பறிவாளர் இன்ஸ்பெக்டர் கோடே என்னும் வேடத்தில், மெர்ச்சண்ட்-ஐவோரி தயாரிப்பில் தி பர்ஃபெக்ட் மர்டர் என்னும் ஆங்கில மொழிப் படத்தில் நடித்தார்.

திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிக்கான ஆசிய அகாடமியின் சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக் காட்சிக் கழகம் என்னும் அமைப்பில் இவருக்கு வாழ்நாள் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
நசிருதீன் ஷா தமது நாடகக் குழுவுடன் புது டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் லாகூர் போன்ற இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நிகழ்தி வருகிறார். இஸ்மத் சௌக்டை மற்றும் சாதத் ஹஸன் மாண்டோ ஆகியோர் எழுதிய நாடகங்களை அவர் இயக்கியுள்ளார்.
ஒரு திரைப்பட இயக்குனராக அவர் அறிமுகமான யூன் ஹோத்தா ஹை தோ க்யா ஹோத்தா 2006வது வருடம் வெளிவந்தது. இந்தப் படத்தில் கொங்கனா சென் ஷர்மா, பரேஷ் ராவல், இர்ஃபான் கான் போன்று தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பல நட்சத்திரங்களுடன், புதுமுகம் ஆயேஷா டாக்கியா மற்றும் அவரது மகன் இமாத் ஷா ஆகியோரும் நடித்திருந்தனர்.
