Sunday, April 11
Shadow

பிரபல நடிகர் சம்பத் ராமுக்கு கலாபவன் மணி நினைவு விருது


பிரபல தென்னிந்திய திரை நடிகரும் இசை அமைப்பாளரும் பாடகருமான கலாபவன் மணி அவர்கள் நினைவாக “கலாபவன் மணி நினைவு விருது” 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சிறந்த சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் மலையாள திரை கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருது 2019ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை கலைஞர்களுக்கும் வழங்க இஸ்மாயில் தலைமையிலான விருது தேர்வுக் குழு முடிவு செய்தது.

அந்த வகையில் பிரபல துணைநடிகரும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான சம்பத் ராம் 2019ஆம் ஆண்டுக்காண சிறந்த துணை நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான “காஞ்சனா 3” படத்தில் “அகோரி” கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக சம்பத்ராம் “கலாபவன் மணி நினைவு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கான விழா கலாபவன் மணி அவர்களின் பிறந்த நாளான கடந்த ஜனவரி 1ஆம் தேதி எளிய முறையில் கேரளாவில் நடந்து. ஆனால் கொரோனா முடக்கம் காரணமாக சம்பத்ராம் நேரில் சென்று விருதை வாங்க இயலவில்லை.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் “வல்லரசு” புகழ் இயக்குனர் N.மகாராஜன் அவர்கள் சம்பத்ராமுக்கு கலாபவன் மணி நினைவு விருதை வழங்கி கவுரவித்தார்.

“யமுனா” மற்றும் “கட்டில்” திரைப்பட இயக்குனர் திரு. E.V.கணேஷ் பாபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்பத்ராம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்

CLOSE
CLOSE