மசாலா பிக்ஸ் மற்றும் MRKP
ப்ரொடக்ஷன் இணைந்து தயாரிக்க- சந்தானம் நாயகனாக நடிக்கிறார். R.கண்ணன் இயக்குகிறார்
தில்லுக்கு துட்டு 2 படத்தின் மாபெரும் வெற்றி தமிழ் சினிமாவில் நடிகர் சந்தானத்தின் அந்தஸ்தை வெகுவாக உயர்த்தி உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் R. கண்ணனுடன் புது படத்துக்காக இணைகிறார் சந்தானம். இப்படத்தை மசாலா பிக்ஸ்- க்காக R.கண்ணன் மற்றும் MKRP ப்ரொடக்ஷனுக்காக M.கே.ராம் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார்கள். இது ஆக்ஷ்ன் , காமெடி மற்றும் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்கள் உள்ள பொழுதுபோக்கு படமாக உருவாகவுள்ளது.முன்னணி நடிகை ஒருவர் இதில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடை பெற்று வருகிறது.ஜுலை மாதம் படப்பிடிப்பு துவங்கி 2019 டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது./ வர உள்ளது. இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தை கதை திரைக்கதை அமைத்து இயக்குகிறார், R.கண்ணன் . இவர் , ஜெயம்கொண்டான், கண்டேன்காதலை, வந்தான் வென்றான், வந்தான் வென்றான், பூமராங் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.