Friday, September 30
Shadow

ஹீரோவாக ஆக ஆசை படும் காமெடி நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் எப்பவும் காமெடி நடிகர்களுக்கு பெரிய வரவேற்ப்பு இருக்கும் ஒரு சில காமெடி நடிகர்கள் தான் தோல்வியை சந்திள்ளனர். அன்று முதல் காமெடியன் என்றால் தன் வீட்டு சகமனிதாராக பார்பார்கள் அதே போல காமெடி என்று ஆரம்பித்து ஹீரோ ஆனவர்கள் பலர் அந்த வரிசையில் நம்ம சூரிகும் அந்த ஆசை போல வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி மூலம் பிர பலமானவர் சூரி. தற்போது கோலிவுட்டின் முன்னணி காமெடியனாகி விட்டார். சூரியின் கால்சீட்டுக்காக பல முன்னணி நடிகர்களின் படங்களே வெயிட்டிங்கில் உள்ளன.

ஆக, இதற்கு முன்பு கிடைத்த படங்களில் எல்லாம் நடித்து வந்த சூரி, இப்போது படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். குறிப்பாக, படம் முழுக்க ஹீரோக்களுடன் வரும் படங்களை உடனே டிக் அடித்து விடுகிறார்.

அதோடு, சில படங்களில் ஹீரோ ரேஞ்சுக்கு சூரியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை தனது பிறந்த நாளை சத்தமில்லாமல் கொண்டாடி வந்த சூரி, சமீபத்தில் தனது பிறந்த நாளை எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் விமரிசையாக கொண்டாடினார்.

அதோடு சூரிக்கு வாழ்த்து தெரிவித்து சென்னை, கோவை, சேலம், மதுரை ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இதில் சென்னை ஏரியா ரசிகர்கள், இந்த ஆண்டு உங்கள் தரிசனம் கிடைக்கவில்லை.

அடுத்து ஆண்டு பிறந்த நாளில் கண்டிப்பாக எங்களுக்கு தரிசனம் தர வேண்டும் தலைவா -என்று பல ஏரியாக்களில் சூரியின் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தலைவா இது ரசிகர்களா இல்லை ?

Leave a Reply