Tuesday, April 21
Shadow

மீண்டும் போலிஸ் அதிகாரியாக ஆகும் விஜய் ஆண்டனி

ஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் “காக்கி”

இது வரை சினிமா வரலாற்றில் பல போலிஸ் கதை பின்னனியில் உருவான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் காக்கி திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணியை மய்யப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது “காக்கி”

இப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர்.

வாய்மை படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோஸ்ஸில் துவங்கியது. இப்படத்தின் முதல் காட்சியை திருமதி.பாத்திமா விஜய் ஆண்டனி துவக்கிவைத்தார்.

திமிரு புடிச்சவன் படத்திற்கு பிறகு, கொலைகாரன், அக்னிச்சிறகுகள், தமிழரசன், காக்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் காக்கி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். எஸ்.செந்தில்குமார் இயக்குகிறார்.

விஜய் ஆண்டனியுடன் சத்யராஜ், ஈஸ்வரிராவ், ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் நடிக்க, இவர்களுடன் ஜெய் விளையாட்டு வீரராக நடிக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.

திமிரு புடிச்சவன் படத்தில் போலீசாக நடித்துள்ள விஜய் ஆண்டனி இந்த படத்தில் அதைவிட அதிரடியான போலீசாக நடிக்கிறார். மேலும் முதன்முறையாக சிக்ஸ்பேக் வைத்து நடிக்கிறார். அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Download for