Friday, April 17
Shadow

1500 நடிக சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் விஷால் ஒருமாத மளிகை சாமாஙள் உதவி

கொரனா வால் சினிமா தொழிலாளர்கள் வேலையில்லாமல் மிகவும் சிரமபட்டு வருகிறார்கள் அவர்களுக்கு பலர் உதவி செய்து வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் விஷால் தன் பங்களிப்பாக கணிசமான அளவில் உதவி செய்துள்ளார்.

நடிகர் விஷால் , தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சென்னையை சார்ந்த சுமார் 1500 பேருக்கு , ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை கொடுத்து உதவினார். அதை இன்று நடிகர் ஶ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் அனைவருக்கும் வழங்கினார்கள். வெளியூர் உறுப்பினர்களுக்கும் வழங்குவதற்க்கான ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும் 300 திருநங்கைகளுக்கும் மளிகை சாமான் கொடுக்கப்பட்டது. மற்றும் தொற்று நோய் தடுப்பதற்க்கான கைஉறை 1000 , முக கவசம் 1000 துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி செய்தார்.