Sunday, April 19
Shadow

நடிகை புவனேஸ்வரி மகன் ஆள் கடத்தல் வழக்கில் கைது

?சென்னை விருகம்பாக்கத்தில் அப்பார்ட்மெண்ட் ஒன்றொல் வசித்து வரும் உதயா என்பவர் தன்னோட ஹச்பண்டை பிரிஞ்சு 2 குழந்தைகளுடன் இருக்கிறார். இந்நிலையில், ஃபேஸ்புக்கில் பழக்கமான பிரபல ஆபாச நடிகை புவனேஸ்வரியின் மவன் மிதுன் சீனிவாசன் உதயாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு உதயாவிடம் கூறி மிதுன் வற்புறுத்தியுள்ளார். ஆனால், மிதும் போதை பழக்கத்துக்கு ஆளானவர் என்பதை அறிந்த உதயா, அவரை திருமணம் செய்துக் கொள்ள மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மிதுன் உதயாவை தாக்கி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். மிதுனின் பிடியில் இருந்து தப்பி வந்த உதயா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிச்சார். உதயாவின் புகாரையடுத்து மிதுனை போலீஸார் அரெஸ்ட் செஞ்ச்ருகாய்ங்க.??