
நடிகை தேவயானியின் இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் ஏப்ரல் 9, 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது. இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
பாட்டாளி, நிலவே முகம் காட்டு, தொட்டா சிணுங்கி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, பூமணி, சிவசக்தி, மகாத்மா, விவசாயி மகன், காதலி, பெரிய இடத்து மாப்பிள்ளை, சூரிய வம்சம், உதவிக்கு வரலாமா, கிழக்கும் மேற்கும், மறுமலர்ச்சி, சொர்ணமுகி, நினைத்தேன் வந்தாய், மூவேந்தர், பூந்தோட்டம், செந்தூரம், உனக்கும் எனக்கும் கல்யாணம், என் உயிர் நீ தான், புதுமை பித்தன், தொடரும், கும்மிப்பாட்டு, நீ வருவாய் என, ஒருவன், வல்லரசு, அப்பு, என்னம்மா கண்ணு, பாரதி, தெனாலி, கண்ணுக்கு கண்ணாக, என் புருசன் குழந்தை மாதிரி, விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், பிரண்ட்ஸ், நினைக்காத நாளில்லை
விவரமான ஆளு, அழகி, கோட்டை மாரியம்மன், பஞ்சதந்திரம், தென்காசிப் பட்டணம், குருவம்மா, சமஸ்தானம், படை வீட்டம்மன், காதலுடன், பீஷ்மர், நியூ, கிரி, செம ரகளை, செந்தாழம் பூவே, ஐந்தாம் படை, திருமதி தமிழ்