நடிகை தேவயானி பிறந்த தினம் இவரை ஒரு சிலவரிகள்
நடிகை தேவயானியின் இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் ஏப்ரல் 9, 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது. இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
பாட்டாளி, நிலவே முகம் காட்டு, தொட்டா சிணுங்கி, ...