Tuesday, April 21
Shadow

நடிகை மீராவாசு தேவன் பிறந்த தினம்

இவர் தமிழில் உன்னை சரண் அடைந்தேன், ஜெர்ரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். சென்னை வடபழனியில் வசி‌த்து வரு‌ம் இவ‌ர் ‘ஷெர்ரி’ படத்திலும், தற்போது ஏராளமான டி.வி. தொடர்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது, பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷால் அகர்வாலுக்கும், மீரா வாசுதேவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
‌பி‌ன்ன‌ர் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் சென்னை வடபழனியில் 15.7.2005 அன்று இந்துமுறைப்படி திருமணம் நடந்தது. அதன்பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

நாளடைவில் விஷால் அகர்வாலுக்கும், மீரா வாசுதேவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக 22.12.2007 அன்று முதல் தனித்தனியாக வாழ்ந்தனர்.
மீண்டும் சேர்ந்து வாழவழியில்லை என்று முடிவு செய்தபிறகு பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் விவாகரத்து பெற முடிவு செய்தனர்

இவர் நடித்த தமிழ் படங்கள்

உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்க மறு