
நடிகை மும்தாஜ் ஒரு இந்திய நடிகை ஆவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் மோனிஷா என் மோனலிசா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது நடிகை மும்தாஜ் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் என்ற பொழுதுபோக்கு மிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக உள்ளார். இவரை வெளியேற்ற மற்ற போட்டியாளர்கள் நினைப்பதால் அவரது பெயர் எல்லா வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பெறுகிறது.
இந்நிலையில் மும்தாஜ் தன் குடும்பம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இவர் பூர்வீகம் பாகிஸ்தான் என்றும், தாத்தா மிகப்பெரிய பணக்காரராக இருந்தார் என்றும் தெரிவித்தார். மேலும் தனது வீட்டில் பெண் குழந்தைகளுக்கு கண்ணாடி வளையல் வாங்க அந்த காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களாம்.
மேலும் தன் குடும்பத்தில் உள்ள சிலர் ஒரு முறை அணிந்த உடையை, திரும்பவும் அணியமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
