Wednesday, May 6
Shadow

நடிகை நமீதா கணவர் வீரா சவுத்ரி  இயக்கி நடிக்க இருக்கும் புதிய படம்

நடிகை நமீதா கணவர் வீரா சவுத்ரி  இயக்கி நடிக்க இருக்கும் புதிய படம்

 

ஒரு காலகட்டத்தில் தமிழ் மிகப் பிரபலமாக இருந்த கவர்ச்சி நடிகை என்று சொல்லவும் நமீதா தற்போது சினிமாவில் இருந்து சில காலமாக விலகி இருந்தார்.

இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி இறங்கியுள்ளார். அதன் முதல் கட்டமாக நடிப்புக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இந்த கல்லூரியை நடிகை தேவயானி திறந்து வைத்தார்.

 

தற்போது ஒரு படத்தை தயாரிக்க அவர் கணவர் வீரா சவுத்ரியுடன் சேர்ந்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தில் நமீதா ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இதற்காக தன் உடல் எடையை குறைத்து இளம் நாயகி தோற்றத்துடன் தயாராகி வருகிறார். அவர் கணவர் வீரா சவுத்ரி தன் இந்த படத்தை இயக்குகிறார் அதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான வேலையில் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது இந்த படத்தின் மூலம் நமீதாவின் கணவர் வீரா சவுத்ரி இயக்குனராக அதோடு நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார.