
இயக்குனர் ஆர் கே செல்வமணி பெப்சி சங்க தலைவர் பதவி விலகி மீண்டும் படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.
திரைப்படக் கல்லூரி மாணவரான ஆர் கே செல்வமணி புலன் விசாரணை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தன் முதல் படத்திலிருந்து தமிழ் சினிமாவை தொடர்ந்து வெற்றி படங்களாக குவித்து மிகப்பெரிய இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
தொடர் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றார். அந்த நேரத்தில் தன் நடிகை ரோஜாவை திருமணம் செய்தார். கடைசியாக இவர் இயக்கிய திரை படம் புலன் விசாரணை 2 இந்த படம் 2000ம் ஆண்டு தயாரானது ஆனால் வெளியானதோ 2015 ஆம் ஆண்டு தான். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அவர் படம் இயக்குவதில் இருந்து விலகி பெப்சி சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது அவருடைய மிகப்பெரிய வெற்றிப்படமான கேப்டன் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரீ ரிலீஸ் செல்லும் மாபெரும் வெற்றியை தழுவியது. புதிய படங்களின் வசூலை மிஞ்சும் அளவிற்கான வசூலை தேடித் தந்தது. இதனால் மீண்டும் படம் இயக்கும் எண்ணம் இயக்குனர் ஆர் கே செல்வமணிக்கு வந்துள்ளது இதன் காரணமாக கேப்டன் பிரபாகரன் 2 இயக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தில் விஜயகாந்த் காட்சிகளை AI மூலம் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதோடு இந்த படத்தில் இன்னொரு நாயகனும் நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் இன்னும் முடிவாகாத நிலையில் அதன் பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குனர் ஆர் கே செல்வமணி. படம் இயக்க வேண்டும் என்றால் பெப்சி சங்க தலைவராக இருந்தால் இரண்டையும் சரியாக செயல்படுத்த முடியாது அதன் காரணமாக தன் பதவியை விலக திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் கசிந்துள்ளது. கேப்டன் பிரபாகரன் 2 அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.
