Saturday, November 7
Shadow

கால் செண்டரில் வேலை செய்யும் நிகிலா விமல்

 

கொரோனா அச்சத்தால் முடங்கி போயிருக்கும் ஏகப்பட்ட நடிகை, நடைகர்கள் வெட்டியா பொழுதை போக்கி அதை வீடியோ-வா எடுத்து ஷேர் செய்து வரும் சூழலில் நமக்கெல்லாம் அறிமிகமான ஆக்டரஸ் செய்திருக்கும் காரியம் பலரையும் பாராட்ட வச்சிருக்குது.

அதாவது சசிகுமார் நடிச்ச ‘வெற்றிவேல்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை நிகிலா விமல். அப்பாலே மறுப் அடியும் அதே சசிகுமாருடன் ‘கிடாரி’ படத்தில் நடிச்சிருந்தார். மேலும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கார்

இதுக்கிடையிலே உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில் கேரளாவில் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருது
அதை அடுத்து நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சீராக கிடைக்கும் வண்ணம் கால் சென்டர்கள் மூலம் பல தேவைகள் ஒழுங்கு செய்யப்படுது.

இந்நிலையில் கேரள அரசின் மூலம் இது போன்ற கால்சென்டர்களில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனைப் பார்த்த மேற்படி நடிகை நிகிலா விமல் உடனே அந்த பணியில் இணைஞ்சிகிட்டாடார்.

அதனையடுத்து மக்களிடம் தொலைபேசியில் பேசி, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்று வேலையை அவர் பார்த்து வருகிறார். இந்த செய்தி மலையாள ஊடகங்களில் தீவிரமாகப் பரவியது. இதனை அறிந்த ரசிகர்களதான் நிகிலாவின் பரந்த மனப்பான்மை நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.