Wednesday, November 5
Shadow

நடிகை ரித்விகா பிறந்த தினம் பதிவு

ரித்விகா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சிவகுமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.

ரித்விகா இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சேலத்தில் பிறந்தவர். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள நீதியரசர் பசீர் அகமது சையது கல்லூரியில் கல்வி பயின்றவர்.

பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக விக்ரமன் இயக்கிய காதல் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் வட சென்னைப் பெண்ணாக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இக்கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.[2][3] ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் பண்பலை தொகுப்பாளராக நடித்தார். தொடர்ந்து எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது திரைப்படத்திலும் நடித்துள்ளார். மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கிய பா. ரஞ்சித்தின் அடுத்த படமான ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

பரதேசி, நினைத்தது யாரோ, மெட்ராஸ், அழகுக் குட்டிச் செல்லம், அஞ்சலை, ஒரு நாள் கூத்து, கபாலி, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, இருமுகன் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளார் பிறந்த நாளை அங்கு தான் கொண்டாட இருக்கிறார்