Sunday, December 8
Shadow

ஆன்மீகத்து பயணத்தை முடிந்ததும் சூப்பர் ஸ்டார் அடுத்த அதிரடி திட்டம் என்ன தெரியுமா?

கடந்த 10 ஆம் தேதி இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார் ரஜினி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் சென்றவர், அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனது முக்கிய வழிகாட்டிகளை இந்தப் பயணத்தில் சந்தித்து ஆசி பெறுகிறார் ரஜினிகாந்த்.

நெடுந்தூரப் பயணம் என்றால் விமானப் பயணத்தையே தேர்வு செய்வார் ரஜினி. இந்த முறை உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ரயில் பயணம் மேற்கொள்கிறார். மேலும், மலைப்பாதையில் நடைபயணமும் உண்டு.

இமயமலையில் 15 நாட்கள் தங்க திட்டமிட்டிருப்பதாகவும், அங்கு சென்ற பிறகுதான் எத்தனை நாட்கள் என்பது குறித்து முடிவு செய்யப் போவதாகவும் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்திருந்தார் ரஜினி.

இந்த ஆன்மிகப் பயணம் முடிந்ததும், வழக்கமாக வருடம்தோறும் மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். இதற்கிடையில், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் நியமனப் பணிகளையும் மேற்பார்வையிட இருக்கிறார் ரஜினி.