

சிம்பு விஷயம் எதுவுமே எஸ்.ஜே.சூர்யா டயலாக் மாதிரி தான் இருக்கு இல்லை இருக்க இல்லையான்னு அவருக்கே தெரியாது ஆம் அவர் நடிக்கும் படங்கள் அறிவிப்பு வரும் ஆனால் அது சிலநாட்களில் இல்லை என்று ஆகிவிடும் அப்படிதான் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஊருவாக இருந்த படம் மாநாடு படத்தின் அறிவிப்பு வந்தது அனால் சில நாட்களில் இந்த படம் கைவிடப்பட்டது என்று தயாரிப்பளர் அறிவித்தார் இப்போது மீண்டும் இதற்கு உயிர் கிடைத்துள்ளது .
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க மாநாடு படம் ஆரம்பமாக இருந்தது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சினை என பல முறை செய்திகள் வெளிவந்தன. பல சந்தர்ப்பங்களில் அதை மறுத்த தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் சிம்பு படத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து சிம்பு தரப்பில் மகா மாநாடு என்ற படத்தை ஆரம்பிக்கப் போவதாக பரபரப்பான ஒரு தகவல் வெளியானது. அதன்பின் தயாரிப்பாளர் சங்கத்தில் இரு தரப்பிற்கும் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன் முடிவில் சிம்பு மாநாடு படத்தில் மீண்டும் நடிப்பார் என்றும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் டுவிட்டரில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு, “விரைவில் எஸ்டிஆரின் மாநாடு படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படும்” என்று அறிவித்தார்.
அதற்கு சிம்பு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
