Sunday, June 28
Shadow

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஆர்த்தி மற்றும் மோதல் ஆரம்பம் கண்ணீர் விடும் ஜூலி

அமைதியாக இருந்த வீட்டில் மீண்டும் போர்களமாக மாறியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் வீட்டை விட்டு சென்று திரும்ப வந்த ஆர்த்தி மற்றும் ஜூலி தான் ஆர்த்திக்கு ஜூலி ஈது உள்ள கோவம் இன்னும் போகவில்லை என்று தான் சொல்லணும் ஜூலியை அப்படி ஒரு கார்னர் செய்யும் ஆர்த்தி நேற்று கொடுக்க பட்ட டாஸ்க்யில் மோதல் ஆரம்பம் இல்லை மோதல் வலுவடைந்துள்ளது என்று தான் சொல்லணும்.

நேற்று டாஸ்க்யில் இரண்டு அணியாக பிரிக்கப்பட்டு அதில் பளு அணி ரெட் அணி இதில் ப்ளூ அணி தலைவி ஜூலி ரெட் அணியின் தலைவி ஆர்த்தி பெயிண்ட் அடிக்கும் போட்டி அதில் யார் வெற்றி என்று இரு அணியின் ஜட்ஜ் தீர்மானிக்கவேண்டும் இந்த தீர்மானிப்பில் தான் ஜூலி ஆர்த்தியின் குடுமிசண்டை ஆரம்பம்

இறுதி வடிவம் நீல நிற அணியால் திறமையாக முடிக்கப்பட்டது. நேரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் நீல நிற அணி திறமையாக கையாண்டது, எனவே வெங்கலக் கிண்ணி அவர்களுக்குத்தான் என்பது ஜூலியின் வாதம். ஆனால் முதல் கட்டத்தில் சிவப்பு நிற அணிதானே தன் பணியை வேகமாக செய்து முடித்தது, அந்த உழைப்பை கணக்கில் கொள்ள வேண்டாமா என்பது ஆரத்தியின் அடம். எனவே ஒவ்வொருவரும் அவர்களின் முடிவில் பிடிவாதமாக இருந்தார்கள்.

முடிவை அறிவிக்கும் பணியை பிக்பாஸிடம் விட்டு விடலாம் என்று பார்த்தால் ‘இல்லை. நீங்களேதான் முடிவை அறிவிக்க வேண்டும்’ என்று அறிவித்து விட்டார். பின்னே.. அவருடைய நாரதர் பிழைப்பை அவர் பார்க்க வேண்டாமா?

ஒரு பாமரனாக, வீடியோவில் பார்த்தவரை நீல அணியின் பெயிண்ட்டிங் சிறப்பாக அமைந்தது என்றுதான் நான் நினைக்கிறேன். எனவே ஜூலியின் தீர்ப்பு சரியானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் ஜூலியின் மீது நிரந்தர கடுப்பில் இருக்கும் ஆரத்தியால் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே மறுத்தார். “வேணுமின்னா கேக்கை எடுத்துக்கோங்க’ என்றெல்லாம் சொல்லி எதிர் தரப்பினரை அவமானப்படுத்தினார்.

இது மட்டுமல்லாமல் ஜூலியை தொடர்ந்து அழைத்து நக்கலாக பேசி ஜூலியை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார். ஜூலி எப்படியோ சமாளித்தாலும் ஆரத்தி விடுவதாக இல்லை. ஒருவகையில் ஆரத்தி வெளிப்படையாகத்தானே நடந்து கொள்கிறார்? என்று கூட பார்வையாளர்களின் சில சதவீதத்திற்கு தோன்றலாம். தவறில்லை. ஆனால் தான் வெளிப்படையாக இருப்பது இன்னொருவரின் மனதை ஆழமாக புண்படுத்துகிறது என்றால் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வதும் திருத்திக் கொள்வதும்தான் சரியானது. ஆரத்தியால் இன்னமும் இதை உணரவே முடியவில்லை. பார்வையாளகளின் வெறுப்பையும் எரிச்சலையும் அதிகம் சம்பாதிக்கும் ஆரத்தி, நாமினேஷனில் வந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார், வெளியேற்றப்பட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

Leave a Reply