
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்த படத்தைஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில், நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது
