
அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உலகம் முழுவது வெளியாகி ரசிகர்களிடையே மாஸான வரவேற்பை பெற்றது, விமர்சனங்களை புறம் தள்ளி சாதனைகளை படைத்தது. ஒரு சிலர் வேணும் என்றே படத்தை பழிவாங்க மிக மோசமான விமர்சனம் கொடுத்தார்கள். இருந்தும் இந்த படம் மிக பெரிய வசூல் சாதனையை புரிந்தது. இதையும் அந்த ஒரு சிலர் தவறாக வர்ணித்து வருகிறார்கள் .
தமிழகத்தில் சுமார் 90% திரையரங்குகளில் வெளியானதால் இந்த படத்தை முதல் மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட 50% ரசிகர்கள் பார்த்து முடித்திருப்பார்கள்.
மற்ற வாரங்களில் சினிமா ரசிகர்கள் பெரும்பாலும் எப்படியும் பார்த்து முடித்திருப்பார், இதனால் படம் எப்படியும் உண்மையாகவே நல்ல வசூல் பெற்றிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் படத்தின் வெற்றி, வசூல் பற்றி லோக்கல் பத்திரிக்கை முதல் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வரை செய்திகள் வெளியாகி விட்டன.
இருப்பினும் சில இணையதள பத்திரிக்கைகள் படம் ஓடவில்லை, கூட்டம் குறைந்து விட்டது, படம் பிளாப் என கூறி வருகின்றன.
இது பற்றி அஜித் ரசிகர்களும், நெட்டிசன்களும் விவேகத்தை பற்றி புலம்பறத விடுங்கப்பா,எதிர்மறையா விமர்சிக்கறதெல்லாம் விட்டுட்டு போய் வேற வேலை இருந்தால் பாருங்க என கிண்டலடித்து வருகின்றனர்.
