Thursday, October 15
Shadow

ஆலியா பட்டின் புதிய அவதாரம்… ‘லவ் & வார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்தன!

ஆலியா பட்டின் புதிய அவதாரம்… ‘லவ் & வார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்தன!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம், அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 2027ஆம் ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக கருதப்படும் இப்படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

படத்தின் முதல் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரன்பீர் கபூரின் கதாபாத்திர தோற்றங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், தற்போது ஆலியா பட்டின் இரண்டு புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இந்த போஸ்டர்களில் ஆலியா பட் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக, புதிய தலைமுறை கேபரேட் கலைஞரை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அவரது தோற்றம், படத்தின் காட்சி அமைப்பு மற்றும் கதாபாத்திரம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

முதல் போஸ்டரில், ஆலியா பட் நாற்காலியில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். ஸ்லிட் ஸ்கர்ட், பிரத்யேக தலை அலங்காரம் உள்ளிட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தோற்றம், அவரது கதாபாத்திரத்தின் கிளாமர் மற்றும் தனித்துவமான ஸ்டைலை வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது போஸ்டர், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட காட்சியமைப்பை கொண்டுள்ளது. மின்னும் கேபரேட் மேடை பின்னணியில் இடம்பெற, அதற்கேற்ற உடை மற்றும் அலங்காரத்துடன் ஆலியா பட் தோன்றுகிறார். சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படங்களில் வழக்கமாக காணப்படும் பிரம்மாண்டமான கலை வடிவமைப்பு மற்றும் நுணுக்கமான காட்சியமைப்பு இந்த போஸ்டர்களிலும் பிரதிபலிக்கிறது.

‘கங்குபாய் கத்தியவாடி’ படத்திற்குப் பிறகு சஞ்சய் லீலா பன்சாலியுடன் ஆலியா பட் மீண்டும் இணைந்துள்ளதால், அவரது கதாபாத்திரம் ஆரம்பம் முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய போஸ்டர்கள், அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

மேலும், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுகங்கள், ‘லவ் & வார்’ திரைப்படத்தின் மீதான கவனத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. படத்தின் கதை, கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் விக்கி கௌஷலின் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027 ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

Alia Bhatt’s New Avatar Takes the Internet by Storm; ‘Love & War’ First-Look Posters Create Huge Buzz!

Sanjay Leela Bhansali’s highly anticipated film ‘Love & War’, starring Ranbir Kapoor, Alia Bhatt and Vicky Kaushal, has been generating significant buzz ever since its announcement. With every new update from the much-awaited film attracting attention, the excitement surrounding the 2027 release continues to grow.

Following the unveiling of the film’s first poster and Ranbir Kapoor’s character looks, the makers have now released two new first-look posters featuring Alia Bhatt.

The actress appears in a never-before-seen avatar, with the posters introducing her as a glamorous new-generation cabaret performer. Her distinctive look and the elaborate visual presentation have instantly caught the attention of fans and added to the curiosity surrounding her character.

In the first poster, Alia Bhatt is seen seated on a chair in a striking slit skirt, complemented by a distinctive headpiece. The carefully designed look highlights the glamorous side of her character while giving the poster a strong visual appeal.

The second poster presents Alia in a completely different cabaret-inspired look. Set against a glittering stage, the poster showcases the meticulous costumes, styling and elaborate production design that are synonymous with Sanjay Leela Bhansali’s cinematic world.

The latest posters have also intensified curiosity about Alia Bhatt’s role in the film. Having already established herself as one of the leading performers of her generation, Alia appears to be exploring a distinctly different character in ‘Love & War’.

Her reunion with Sanjay Leela Bhansali after ‘Gangubai Kathiawadi’ has been one of the major talking points surrounding the project. The newly released looks have further raised expectations about the character she will portray.

With Ranbir Kapoor and Alia Bhatt’s looks being unveiled one after another, ‘Love & War’ continues to remain in the spotlight. The posters have offered audiences glimpses into Bhansali’s grand visual world while leaving fans eager to discover more about the film’s characters and story.

Directed by Sanjay Leela Bhansali, ‘Love & War’ stars Ranbir Kapoor, Alia Bhatt and Vicky Kaushal in the lead roles. The film is scheduled to release worldwide on January 21, 2027, in Hindi, Tamil and Telugu.